வருகிற கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமலாகிறது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வருகிற கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமலாகிறது


வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அமைச்சர்செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:- போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளிவீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும். 'நீட்'தேர்வு 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக வெளியிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் உதவி மூலம் கிராமப்புறங்களில் அனைத்து பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு போதுமான பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here