*_25 - 04 - 2017_*
*_செவ்வாய்க்கிழமை_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_✴🇮🇳✴சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம்_*
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார். எழும்பூரில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதிக்காததால் சென்ட்ரலிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴திருவாரூர் அருகே ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம்_*
திருவாரூர்: தஞ்சாவூர் - காரைக்கால் பயணிகள் ரயிலை குளிக்கரையில் மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ரயிலை மறித்து முழக்கமிட்டு வருகின்றனர்.
*_✴🇮🇳✴டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் சென்னை வந்தனர்_*
சென்னை: 41 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சென்னை வந்தனர். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் ரயில் மூலம் சென்னை வந்தனர். பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
*_✴🇮🇳✴புதுச்சேரியில் கடைகள், காய்கறி சந்தைகள் மூடல்_*
புதுச்சேரி: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள், காய்கறி சந்தைகள் மூடப்பட்டுள்ளது. ஆட்டோ, தனியார் பேருந்துகளும் இயங்காததால் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
*_✴🇮🇳✴அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு_*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
*_✴🇮🇳✴திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்_*
திருப்பூர்: முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
*_✴🇮🇳✴மதுரை மாநகர் முழுவதும் கடைகள் மூடல்_* தமிழ் இணைய செய்திகள்
மதுரை: மதுரை மாநகர் முழுவதும் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி மார்க்கெட், சிம்மக்கல் பழ மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக