இயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (தர்மதுரை)
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'தர்மதுரை'. இப்படத்தில் இடம்பெற்ற 'எந்தப்பக்கம்' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருது வென்றுள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
'24' படத்துக்கு 2 விருதுகள்
விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '24' படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் திருவுக்கு விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் அக்ஷய்குமார்
இந்திப் படமான 'ரூஸ்டம்' (RUSTOM) படத்தின் நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அக்ஷய்குமார் பெறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக