இலவச எல்.கே.ஜி அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இலவச எல்.கே.ஜி அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச சேர்க்கைக்கான காலியிடங்கள் பட்டியலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பான ஒன்றாம் வகுப்பில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, நலிந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
அதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்புக்கு நடத்தப்பட உள்ளது. தேர்வுத்துறை இணையதளம் மூலம், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. ஏப்., 20 முதல், மே, 18 வரை பதிவு செய்யலாம். அதன்பின், குலுக்கல் முறையில் வெளிப்படை தன்மையுடன், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த இலவச சேர்க்கைக்கு, 9,000 பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இந்த இடங்களின் பட்டியலை, பள்ளிகள் வாரியாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாவட்ட வாரியாக எந்த பள்ளியில், எத்தனை இடங்கள் உள்ளன; அவற்றில், இலவச சேர்க்கைக்கான இடங்கள் எத்தனை என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here