http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_04 - 04 - 2017_*
*_செவ்வாய்க்கிழமை_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_✴🇮🇳✴கோடை விடுமுறையில் 5,298 வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்_*
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை மே 11ம் தொடங்கி ஜூலை 2ம் தேதி முடிகிறது. இந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2 விடுமுறை அமர்வு முன்பாக விசாரணை வரும் வழக்குகள் குறித்த பட்டியலை உச்ச நீதிமன்ற பதிவுதுறை வெளியிட்டுள்ளது. இதில், 5,298 வழக்குகள் உள்ளன. மேலும், சட்டவிரோத குடியேற்றம், குடியுரிமை சட்டம் பிரிவு 6ஏ உள்ளிட்ட முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.
*_✴🇮🇳✴பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 பேர் விருப்ப ஓய்வு_*
மும்பை: பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதனால் வங்கியின் நிர்வாகி கிளைகளும் ஒன்றிணைக்கப்டுவதால் ஊழியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் வங்கி இணைப்புக்கு பிறகு மற்ற கிளைகளில் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என பாரத ஸ்டேட் வங்கி வட்டாரங்கள் கூறியிருந்தன.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மும்பையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட துணை வங்கிகளை சேர்ந்த ஊழியர்களில் 2,800 பேர் மட்டும் விருப்பு ஓய்வு திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டம் ஏப்ரல் 5ம் தேதி வரை அமலில் இருக்கும். ஐந்து துணை வங்கிகளில் உள்ள சுமார் 12,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற தகுதி உள்ளவர்கள் என்றார்.
ஒரு ஊழியர் தொடர்ந்து 20 ஆண்டுக்கு மேல் பணியாற்றியிருந்து 55 வயதை எட்டியிருந்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு இதன் ஊழியர் எண்ணிக்கை 2,70,011 ஆகியுள்ளது. இதில் இதன் துணை வங்கிகளில் இருந்து வந்த 69,191 பேரும் அடங்குவர். குறைந்த பட்ச இருப்பு தொகை குறித்து மற்றொரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ள அருந்ததி பட்டாச்சார்யா, குறைந்த பட்ச இருப்பு விதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை.இது சராசரி இருப்பு அளவாக கொள்ளப்படும். மெட்ரோ நகரங்களில் மாதாந்திர சராசரி இருப்பு ரூ.5,000 இருக்க வேண்டும். 3 நாட்களுக்கு ரூ.15,000 இருப்பு வைத்திருந்து, 2 நாட்கள் இருப்பு எதுவும் இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படாது என்றார்.
கடன் வட்டி 9.1%ஆக குறைப்பு
பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி விகிதத்தை 9.25 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்த வங்கி அறிவித்துள்ளது.
*_✴🇮🇳✴நவம்பர் 8 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டு பரிவர்த்தனை எவ்வளவு?: முழு விவரமும் சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு_*
புதுடெல்லி: செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டில் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு, நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என 50 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் வசிப்பவர்கள் இவற்றை மாற்றுவதற்கான வாய்ப்பு எதுவுமே இனி இல்லை.
இந்நிலையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட மேற்கண்ட ரூபாய் நோட்டுகளில், கடந்த ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை எவ்வளவு பரிவர்த்தனை செய்யப்பட்டது என்ற விவரங்களை அளிக்க வேண்டும் என, நிறுவனங்களிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து கம்பெனிகள் விவகார அமைச்சகம், பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அளிக்கப்பட்ட 50 நாள் அவகாசத்தில் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்திய தொகை எவ்வளவு எனவும், இதுகுறித்து தங்களது வரவு செலவு அறிக்கையில் விவரங்களை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
முன்னதாக, அவர்களிடம் கையில் ரொக்கமாக வைக்கப்பட்டிருந்த இருப்பு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், பழைய நோட்டாக டெபாசிட் செய்த விவரமும் தெரிவிக்க வேண்டும் என கம்பெனிகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நிறுவன ஆடிட்டர்கள் இந்த விவரங்களை பேலன்ஸ் ஷீட்டில் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேற்கண்ட விவரங்களை நிறுவனங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க செய்யும் வகையில் கம்பெனிகள் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பட்டய கணக்காளர் சங்கமும், தங்களிடம் உறுப்பினராக உள்ள ஆடிட்டர்களுக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், கம்பெனிகள் சட்ட விதிகளின்படி, 2016-17 நிதியாண்டுக்கான நிதி அறிக்கையில் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
*_✴🇮🇳✴டிரக் நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி இழப்பு_*
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, டிரக் நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு படுதலை குறைக்கும் வகையில், பாரத் ஸ்டேஜ் 3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், வணிக பயன்பாட்டு வாகனங்கள், டூவீலர்கள் உட்பட, சுமார் 8.2 லட்சம் வாகனங்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், மார்ச் 31ம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து அதிக தள்ளுபடியில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
பிஎஸ் 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு விதித்த தடையால் ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி கிரிசில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், டிரக் போன்ற 96,700 வணிக பயன்பாட்டு வாகனங்கள் இருப்பு இருந்தன. மார்ச் 31ம் தேதி வரை 20 முதல் 40 சதவீத தள்ளுபடியில் இவை விற்கப்பட்டன. உத்தரவு வெளியாகி மார்ச் 31 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 55 சதவீத வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் தள்ளுபடி வகையில் சுமார் ரூ.1,200 கோடியும், விற்பனையாகாத வகையில் ரூ.1,300 கோடியும் என டிரக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டதாக கிரிசில் கணித்துள்ளது.:
*_✴🇮🇳✴டிரம்ப் பாணியில் அதிரடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு விசா வழங்க சிங்கப்பூர் மறுப்பு_*
புதுடெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு விசா வழங்க சிங்கப்பூர் அரசு மறுத்துள்ளது, ஐ.டி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, எச்1 பி விசா நடைமுறைகளில் பெரும் கெடுபிடிகளை கொண்டு வந்தார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது அந்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் இருப்பதால், இத்தகைய நடவடிக்கையில் டிரம்ப் இறங்கினார்.
இதே பாணியில் சிங்கப்பூர் அரசும் களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு விசா வழங்குவதை சிங்கப்பூர் அரசு குறைத்துக் கொண்டுள்ளது. தற்போது இந்திய நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், உள்ளூரில், அதாவது சிங்கப்பூரை சேர்ந்தவர்களை ஐ.டி நிறுவனங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய ஐ.டி. ஊழியர்களால் சிங்கப்பூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோவதால், இந்திய நிறுவன ஊழியர்களுக்கு விசா வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி சார்ந்த நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக சட்ட விதிகளை மீறியதாக காரணம் காட்டி, பொருளாதார உடன்பாடு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வதையும் சிங்கப்பூர் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் முதலில் காலடி பதித்த டிசிஎஸ், எச்சிஎல் நிறுவனங்கள் மட்டுமின்றி இதன்பிறகு அங்கு நிறுவனம் தொடங்கிய இன்போசிஸ், விப்போ, காக்னிசன்ட், எல் அண்ட் டி இன்போடெக் ஆகியவற்றுக்கும் சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
*_✴🇮🇳✴நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 315 காசாக குறைந்தது_*
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 315 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டை விற்பனை தமிழகம் மற்றும் கேரளவில் குறைவு, பிற மாநிலங்களில் முட்டை விலை குறைப்பு போன்ற காரணங்களால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, முட்டை விலையில் 15 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 315 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.51 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.68 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் வருமாறு (பைசாவில்) ஐதராபாத் 290, விஜயவாடா 310, மும்பை 354, மைசூர் 346, கொல்கத்தா 377, பெங்களுரு 345, சென்னை 345 காசுகள்.
:
*_✴🇮🇳✴நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் தரவரிசை முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி: 2வது இடத்தில் லயோலா கல்லூரி_*
புதுடெல்லி: நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில், பொறியியல் கல்லூரிகளுக்கான பிரிவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. கல்லூரிகள் தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 2வது இடத்தை பிடித்துள்ளது.நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில், வெவ்வேறு பிரிவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்தாண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.கற்பிக்கும் முறை, உள்வாங்குதல், வசதிகள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பட்டம் அளிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, பல்கலைக்கழகம், பொறியியல், மேலாண்மை, பார்மசி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் தரம் பிரிக்கப்பட்டன. இம்முறை ஒட்டுமொத்தம், பொறியியல், மேலாண்மை, பல்கலைக்கழகம், கல்லூரிகள், பார்மசி ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.இதில், பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி, 2வது ஆண்டாக நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 8வது இடத்தையும் வேலூர் விஐடி 13வது இடத்தையும் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சி (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) முதலிடத்தை பிடித்துள்ளது. இதிலும், மும்பை, கான்பூர், கரக்பூர் ஐஐடிக்களை பின்னுக்கு தள்ளி சென்னை ஐஐடி 2ம் இடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 13வது இடத்திலும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 16வது இடத்திலும், வேலூர் விஐடி 22வது இடத்திலும் உள்ளது.
பல்கலைக்கழகங்கள் தரவரிசையிலும் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலை. 6வது இடத்திலும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 9வது இடத்திலும், வேலூர் விஐடி 14வது இடத்திலும், உள்ளன.புதிதாக தரம் பிரிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் பட்டியலில் டெல்லியின் மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி 10வது இடத்திலும், கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி 11வது இடத்திலும், காஞ்சிபுரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி 12வது இடத்திலும், விருதுநகர் அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 13வது இடத்திலும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 14வது இடத்திலும், சென்னை எத்திராஜ் கல்லூரி 16வது இடத்திலும் உள்ளன.மேலாண்மை பிரிவில் அகமதாபாத் ஐஐஎம் முதலிடத்தை பெற்றுள்ளது. திருச்சி ஐஐஎம் 13வது இடத்தை பெற்றுள்ளது. www.nirfindia.org/Ranking2017.html என்ற இணையதள முகவரியில் முழு தரவரிசை பட்டியலும் வெளியிடப்
பட்டுள்ளது.
டாப்-10 பட்டியல்
ஒட்டுமொத்த பிரிவில், முதலிடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி, 2வது இடத்தை சென்னை ஐஐடி, 3வது இடத்தை மும்பை ஐஐடி, 4வது கரக்பூர் ஐஐடி, 5வது டெல்லி ஐஐடி, 6வது ஜவகர்லால் நேரு பல்கலை., (டெல்லி) 7வது கான்பூர் ஐஐடி, 8வது கவுகாத்தி ஐஐடி, 9வது ரூர்கே ஐஐடி, 10வது இடத்தை பனாராஸ் இந்து பல்கலை (வாரணாசி) பிடித்துள்ளன.
பொறியியல் தரவரிசை: 1. சென்னை ஐஐடி, 2. மும்பை ஐஐடி, 3. கரக்பூர் ஐஐடி, 4. டெல்லி ஐஐடி,. 5. கான்பூர் ஐஐடி, 6. ரூர்கே ஐஐடி, 7. கவுகாத்தி ஐஐடி, 8. அண்ணா பல்கலை. 9. ஜாதவ்பூர் பல்கலை (கொல்கத்தா), 10. ஐதராபாத் ஐஐடி.
கல்லூரிகள் தரவரிசை: 1. மிரண்டா ஹவுஸ் (டெல்லி), 2. லயோலா (சென்னை), 3. ராம் காலேஜ் ஆப் காமர்ஸ் (டெல்லி), 4. பிஷப் ஹெபர் கல்லூரி (திருச்சி), 5. ஆத்ம ராம் சனாதன் தர்மா கல்லூரி (டெல்லி), 6. செயின்ட் சேவியர் கல்லூரி (கொல்கத்தா), 7. லேடி ராம் மகளிர் கல்லூரி (டெல்லி), 8. தயால் சிங் கல்லூரி (டெல்லி), 9. தீன தயாள் உபாத்யாயா கல்லூரி (டெல்லி), 10. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி (சென்னை).
*_✴🇮🇳✴மாஜி எம்எல்ஏ சுட்டதில் சிறுமி பலி_*
ரோதாஸ்: பீகாரின் ரோதஸ் மாவட்டம் டென்டுனி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யதியோ சிங். முன்னாள் எம்எல்ஏ. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் சூர்யதியோ சிங் வீட்டருகே, இருதரப்புக்கும் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த சூர்யதியோ சிங், வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து கண்மூடித்தமான சுட்டார்.
இதில், 4 சிறுவர்கள் மீது குண்டு பாய்ந்தது. 8 வயது சிறுமி இறந்தார். மற்ற 3 சிறுவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக