"*BREAKING NEWS:*
*கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.*
*கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.*
*சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் வழங்கிய சலுகைகளில் திருத்தம் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.*
*தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவிட்டது.
*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வு உத்தரவு.*
*மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு.*
*தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு.*
*ரஷியா மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பு: தற்கொலை தாக்குதல் நடத்தியவர் அடையாளம் கண்டுபிடிப்பு*
_செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை தாக்குதலை நடத்தியவர் கியர்கிஸ் என்ற நபர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்._
*இலங்கை அரசுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை*
_இலங்கை அரசுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மீனவர் பிரிட்ஜோ கொலை மற்றும் மீனவர்கள் விடுவிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரிட்ஜோவின் படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது._
*விருகம்பாக்கத்தில் டி.வி நடிகை நந்தினி கணவர் விஷம் குடித்து தற்கொலை*
_சென்னை விருகம்பாக்கத்தில் டி.வி நடிகை நந்தினி கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார். கார்த்திக்கின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்._
*வறட்சியால் வாடும் இலங்கைக்கு உதவ இந்திய அரசு முடிவு*
_கடும் வறட்சியால் வாடும் இலங்கைக்கு உதவ இந்தியா அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் 8 தண்ணீர் லாரிகளும்,100 மெட்ரிக் டன் அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன._
*பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு*
*திருவண்ணாமலையில் குடும்ப தகராறில் விஷம் அருந்திய தாய், மகள் உயிரிழப்பு*
திருவண்ணாமலை அருகே அமர்ந்தபுதூரில் குடும்ப தகராறில் தாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். குடும்ப தகராறில் விஷம் அருந்திய தாய் சரசு மற்றும் மகள் கவுசல்யா இருவர் உயிரிழந்தனர். மேலும் மகள் அனுஷ்கா என்பவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
*கண்ணனுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடா: தமிழிசை புகார்*
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை ஆர்.கே நகரில் பேட்டி அளித்துள்ளார். வீடு கட்டி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆர்.கே நகரில் அதிமுக வாக்கு கேட்கிறது என்றும் வேட்பாளருக்கான வரவேற்பையே பணம் கொடுத்து தான் செய்கிறார்கள் என்றும் தமிழிசை கூறியுள்ளார். மேலும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்தாமல் தேர்தல் நடத்தி என்ன பயன் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
*விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும், நடிகை நந்தினியின் ( மைனா) கணவர் கார்த்திகேயன் லாட்ஜில், விஷம் அருந்தி தற்கொலை.*
*கருப்பு மையை முகத்தில் பூசி கொள்ளுங்கள் : பொன் ராதாகிருஷ்ணன்.*
_கருப்பு மையை எடுத்து மைல் கற்களில் பூசுவதை விட முகத்தில் பூசி கொள்ளுங்கள் என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மைல் கற்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் விதமாக சிலர் கருப்பு மையை பூசினார். இதுதொடர்பாக பேட்டியளித்த பொன் ராதாகிருஷ்ணன் மைல் கற்களில் பூசுவதை விடுத்து முகத்தில் பூசுமாறு தெரிவித்ததோடு இல்லாமல் மைல் கற்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிப்போருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்._
*100 ஏக்கர் நிலம், ஆடி கார் வைத்திருப்பதாக அவமானப்படுத்துகிறார்களே- டெல்லியில் கதறியழுத அய்யாக்கண்ணு*
*டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் சாப்பிடுவதற்கு குருத்வாரில் பிச்சை எடுத்து சாப்பிடுவதாகச் சொன்னது அனைவரையும் கலங்க வைத்தது.*
_தமிழக விவசாயிகள், வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 22 ஆவது நாளாக நடுரோட்டில் வெயிலில் அமர்ந்து போராடி வருகின்றனர். இன்று விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர்._
_அப்போது அய்யாக்கண்ணுவிடம் செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது செய்தியாளர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்._
_அதற்கு 'பிச்சை எடுத்துத்தான் சோறு தின்கிறோம்' என அவர் தழுதழுத்த குரலில் பதில் சொன்னது காண்பவர் கண்ணில் நீரை வரவழைத்தது. ஊருக்கே சோறு கொடுத்த நாங்கள், டெல்லியில் சீக்கியர்களின் குருத்வாரில் பிச்சை எடுத்துத்தான் சோறு தின்கிறோம். சில நாட்கள் டெல்லி வாழ் தமிழர்கள் உணவு வழங்குகிறார்கள் என்று கூறினார். சாப்பாடு கிடைப்பதால்தான் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர் என சில இதயமற்றவர்கள் முகநூலில் குறிப்பிட்டுள்ளதை சுட்டி நிருபர் இக்கேள்வியை எழுப்பினார்._
_மேலும், என்னிடம் 20 ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. ஆனால் 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆடி கார் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்துகிறார்களே என்று சொன்னபோது அய்யாக்கண்ணு அழுதுவிட்டார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தான், அய்யாக்கண்னுவை இப்படியெல்லாம் கூறி இழிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது._
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக