•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_✴சுரேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது : டி.டி.வி.தினகரன் பேட்டி_*
சென்னை : சுரேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என்று டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் டெல்லி போலீசின் வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என டி.டி.வி.தினகரன் பேட்டி கூறினார். நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
*_✴தூத்துக்குடியில் சால்வண்ட் ஆலைக்கு அடிக்கல்_*
தூத்துக்குடி: தூத்துக்குடி கனநீர் ஆலை வளாகத்தில் சால்வண்ட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் கனநீர் வாரிய தலைவர் வர்மா அடிக்கல் நாட்டினார். பாஸ்பரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை : முத்தரசன் பேட்டி_*
சென்னை : தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தரமுடியும் என்ற செய்தி கவலை அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை எனவும் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல் என்று கூறினார்.
*_✴தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது : திருமாவளவன் பேட்டி_*
சென்னை : தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தை ஊழல்மயப்படுத்த தினகரன் முயற்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தையே விலைபேச முடியும் என டி.டி.வி. தினகரன் நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
*_✴தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை_*
சென்னை: தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செய்தார். கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செய்தார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்_*
தஞ்சை: திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
*_✴நாமக்கல் அருகே காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு_*
நாமக்கல்: ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் காணாமல் போன மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவி கோபிகா கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக மாணவி காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்ப்க்ட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக