இன்றைய செய்திகள் 10/05/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்திகள் 10/05/2017

தமிழ் இணைய செய்திகள்
 

             10/05/2017

    http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*BREAKING NEWS*

*கோடநாடு பங்களாவில் வருமான வரித்துறை திடீர் சோதனை.*

*2 வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.*

_கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது சில ஆவணங்கள் திருடு போனதாக செய்திகள் வெளியாகியிருந்ன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்._

*அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட்.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*கர்நாடக சிறையில் உள்ள சுதாகரனை ஜூன் 7 இல் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.*

நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது.

#SupremeCourt உத்தரவை பரிசீலித்து வருகிறோம், அமல்படுத்துவது குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிட முடியாது- *மேற்குவங்க டிஜிபி*

*அத்திக்கடவு - அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்தித்து வலியுறுத்தினேன்* - வானதி சீனிவாசன்

திருச்சி:
தமிழக அரசுப்பள்ளிகளில் கனிணி அறிவியல் பாடத்தை சேர்க்கக்கோரியும் அச்சிடப்பட்ட 50 லட்சம் கனிணி பாடப்புத்தகங்களை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள்  குரல் எழுப்பக்கோரியும் திருச்சி சிவா எம்.பி.யிடம் பி.எட். கனிணி அறிவியல் ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

*அந்நிய செலாவணி மோசடி வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்யாததால், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்.*

*பி.எஸ்.என்.எல். திட்டத்துக்கு வரவேற்பு: 15 நாள்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள்*

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'இத விட ஒசந்தது எதுவுமில்ல' திட்டத்தில் கடந்த 15 நாள்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் சார்பில் 'இதவிட ஒசந்தது எதுவுமில்ல' எனும் பெயரில் எஸ்டிவி 333, 349, 395, 339 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டங்கள் தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த 15 நாள்களில், எஸ்டிவி 333- திட்டத்தில் 59,832 பேரும், எஸ்டிவி 339-திட்டத்தில் 63,292 பேரும், எஸ்டிவி 349-திட்டத்தில் 49,960 பேரும், எஸ்டிவி 395 திட்டத்தில் 26,512 பேர் என 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, டேட்டா திட்டமான எஸ்டிவி 333 திட்டத்தில் நாள்தோறும் 3 ஜிபி அளவு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதோடு, 90 நாள்கள் வரை வேலிடிட்டி உள்ளது. அதன்படி, டேட்டா, அழைப்புகள் என இணைந்த ரீசார்ஜ் திட்டங்களும் வாடிக்கையாளரிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் நாள்தோறும் 12-15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர் என்றார் அவர். http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here