☘🌿🥀🌻🌿🥀🌻🌿🥀🌻🌿🥀🌻🌿🥀🌻
*பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்*
தமிழ் இணைய செய்திகள்
*பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப் பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண் டுள்ளது.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.*
*உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீக்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.*
*புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலை மைக்குத் திரும்பும்.*
*மருத்துவத்தில் பூசணிக் காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.*
*ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீரமருத்துவகுடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண் பூசணி பயன்படுத்தப்படுகிறது.*
*வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்த சுத்தியாகும்.*
*பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.*
*பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.*
*பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவை யான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.*
தமிழ் இணைய செய்திகள்
*பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.*
*பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*இயற்கை மருத்துவம்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻🥀🌻🥀🌿🌻🥀
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக