🔵🔴🔵🔴🔵🔴🔵🔴 *_TNPTF பொதுச்செயலாளர் செய்தி
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌹🌹*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 03.02.2017 அன்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கக்கல்வி இயக்குனரக முற்றுகைப் போராட்டத்தின்போது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்கள் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக முழுமையான அளவில் ஆணைகள் வெளிவராத நிலையில் 10.05.2017 க்குள் உரிய ஆணைகள் வெளியிடப்படவில்லையென்றால் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்திலும்,மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டம் நடத்திட 23.04.2017 அன்று மதுரையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவெடுத்தது.அம்முடிவைச் செயல்படுத்துவதற்குரிய களப்பணிகளில் இயக்கச் செயல்வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் 10.05.2017 அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.அதனடிப்படையில் 10.05.2017 மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் தோழர்.ச.மோசஸ்,பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர்,மாநிலப்பொருளாளர் தோழர்.ச.ஜீவானந்தம்,துணைப்பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் ஆகியோர் பங்கேற்றனர்.புதிய இயக்குனருடன் அறிமுக சந்திப்பே பேச்சுவார்த்தையுடன் தொடங்கியதும், இயக்குனரின் கனிவான உபசரிப்பும் சிறப்பாக இருந்தது.இரண்டரை மணிநேர பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும்,அதில் ஆசிரியர்களின் பங்கேற்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதுவரை ஆணைகள் வெளிவராத ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.விரைந்து ஆணைகள் வெளிவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக இயக்குனர் அவர்கள் உறுதியளித்தார்.மேலும், ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும்,பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை சுமூகமாகவும்,திருப்தியாகவும் நடைபெற்றது*
*(தோழமையுடன்,செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி)*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
👏👍👏👍👏👍👏👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக