தமிழ் இணைய செய்திகள்
17/06/2017
*'இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள்'- முதல்வர் பழனிசாமிக்கு ராமதாஸ் அட்வைஸ்*
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட பிரச்னைக்கு அவசர சட்டமே தீர்வு என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால், அதற்கு இதை நிபந்தனையாக முன்வைத்து மருத்துவக் கல்வி சார்ந்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
*தமிழகத்தில் 'எய்ம்ஸ்': கூடுதல் விபரம் கேட்டது மத்திய அரசு*
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள, ஐந்து மாவட்டங்களில் உள்ள, பள்ளி, கல்லுாரிகளின் விபரங்களை, மத்திய அரசு கேட்டுள்ளது.
'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, அறிவித்த மத்திய அரசு, அதற்கான இடங்களை பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டம் தோப்பூர்; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; புதுக்கோட்டை; ஈரோடு மாவட்டம், பெருந்துறை; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என, ஐந்து இடங்ளை, தமிழக அரசு பரிந்துரைத்தது.
அதில், தஞ்சாவூர் செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி, அந்த மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்ட சபை கூட்டத் தொடரிலும், இது தொடர்பாக பேசப்பட்டது. இந்நிலையில், 'தமிழக அரசு அனுப்பிய விபரங்கள் போதவில்லை; கூடுதல் விபரங்களை அனுப்புங்கள்' என, தமிழக அரசுக்கு, மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.
இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ள, ஐந்து இடங்களில் உள்ள, பள்ளி, கல்லுாரிகள், மக்களின் கல்வித்தகுதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட, பல்வேறு தகவல்களை கேட்டு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு கோரியுள்ள தகவல்களை தங்களுக்கு அனுப்பும்படி, ஐந்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விபரங்கள் கிடைத்ததும், விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*கணினி நாசகாரர்கள் சதி திட்டத்தில் வினாடிக்கு 43 ஆவணங்கள் திருட்டு*
புதுடில்லி : கணினி நாசகாரர்கள் சதி திட்டத்தில் வினாடிக்கு 43 ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
*ஆய்வறிக்கை:*
2016ல், பல்வேறு நிறுவனங்களின் கணினியில் புகுந்து, நாசகாரர்கள் திருடிய ஆவணங்கள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்த ஆய்வறிக்கையை விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
*திருட்டு:*
உலகளவில், 11 நாடுகளில் உள்ள, வங்கி, தயாரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 139 நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 2016ல், 138 கோடி ஆவணங்கள், கணினி நாசகாரர்களால் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, வினாடிக்கு, 43 ஆவணங்கள் களவு போயுள்ளன. இது, 2015ல் திருடப்பட்ட ஆவணங்களை விட, 53.6 சதவீதம் அதிகம்.
*நம்பிக்கை இழப்பு:*
கணினி நாசகாரர்கள், நிறுவனங்களின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிடுவதன் காரணமாக, அந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்து விடுகின்றன. அவற்றின் வர்த்தகம், பங்கு விலை ஆகியவையும் பாதிப்பிற்கு ஆளாகின்றன. ஆரோக்கிய பராமரிப்பு துறையில் தான், அதிக அளவில் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக, விப்ரோ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இணைய செய்திகள்
*போயஸ் தோட்டம் மட்டுமல்ல.. ஹைதராபாத் திராச்சைத் தோட்டத்தையும் விடமாட்டேன் - தீபா*
சென்னை: ஜெயலலிதாவின் ரத்த உறவான தனக்குத்தான் போயஸ்தோட்டத்து வீடும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டமும் சொந்தம் என்றும், இதற்காக சட்டரீதியாக போராடப்போவதாகவும் தீபா கூறியுள்ளார்.
*பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை!. அனுமதிக்ககோரி அமைச்சரிடம் அற்புதம்மாள் மனு!.*
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்த ராஜீவ் கொலைக்குற்றவாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகன் உடல் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் அவரை சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்று மனு அளித்துக்கேட்டுக்கொண்டார்.
*****
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி 5 வது நாளாக உண்ணாவிரதம்;வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற சிறைத்துறைக்கு கோரிக்கை http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔵இந்தியா- பாக். போட்டியின் போது ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்!*
லண்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான பைனல் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நாளை நடைபெறுகிறது.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக ’ரோலண்ட் லேண்டர்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் தெரியவந்துள்ளது.
*🔴🔴 KOCHI METRO*
*கேரளா மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ரயிலில் பயணித்தார்...*
தமிழ் இணைய செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக