50 கி.மீ க்கு ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் - சுஷ்மா சுவராஜ் பேச்சு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

50 கி.மீ க்கு ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் - சுஷ்மா சுவராஜ் பேச்சு

🍎 50 கி.மீ.,க்கு ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் நீண்ட தூரம் அலைய வேண்டிய தேவையில்லை!!

🥀பாஸ்போர்ட் டுகள் வாங்குவதை எளிமைப்படுத்தும் வகையில்,149 புதிய, போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங் களை, வெளியுறவுத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.

🍊 இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதாவது:

🥀 நாட்டில் பெரும்பாலானோர், பாஸ்போர்ட்
பெறுவதற்கு, நீண்ட துாரம் செல்லும் நிலைஉள்ளது. இதற்கு தீர்வாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள், பாஸ் போர்ட் சேவை மையங்களை துவக்க திட்ட மிடப் பட்டு உள்ளது.

🥀இதன் படி,முதற்கட்டமாக,86 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கப் பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 149 பாஸ்போர்ட் சேவை மையங்கள் தற்போது து
வக்கப்பட்டுள்ளன.

🥀இவை, போஸ்ட் ஆபீஸ்களில் செயல்படும். பொது மக்கள் எவரும், பாஸ்போர்ட் வாங்க, 50 கி.மீ., துாரத் துக்கு அதிகமாக செல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது என இலக்கு நிர்ணயித்து நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

🥀 மூன்றாம் கட்டமாக, மேலும் அதிகளவில் பாஸ் போர்ட் சேவை மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

🥀வெளி நாடுகளில் உள்ள,18 - 30 வயதுடைய இந்தியர்கள், நம் நாட்டைப் பற்றிதெரிந்து கொள்ளும் வகையில், 'இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பெயரில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

🥀  இந்த திட்டத்தின் கீழ், 2004 முதல்,இதுவரை, 1,293 பேர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, தங்கள் மூதாதையர் ஊர்களுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here