உலகின் மிக பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் துவக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலகின் மிக பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் துவக்கம்

🍎 உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் துவக்கம்!!!

🥀 ஆந்திர மாநிலம் கர்னுாலில் அமைக்கப்பட்டு வரும், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய் யும், உலகின் மிகப் பெரிய சோலார் பூங்கா, இம் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🥀 வரும், 2022ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி உட்பட, 175 ஜிகாவாட் திறனுள்ள மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு
உள்ளது.

🥀 முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமை யிலான தெலுங்கு தேசம் 
ஆட்சி அமைந்துள்ள ஆந்திராவில், 10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி, 8,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

🥀 ஆந்திர மாநிலம் கர்னுாலில், தனியாரின், 6,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும், மாநில அரசின், 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், சோலார் பூங்கா அமைக்கும் பணி, 2016, நவம்பரில் துவங்கியது.

🥀 ஆறு மாதங்களுக்குள், 40 லட்சம் சோலார் தகடுகள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. 1,000 மெகாவாட் திறனுள்ள இந்த சோலார் பூங்கா,5,900 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சோலார் பூங்காவாக இது விளங்குகிறது.

🥀 தமிழகத்தின் கமுதியில் அதானி நிறுவனம் அமைத்துள்ள, 648 மெகாவாட் திறனுள்ள சோலார் மின் திட்டம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில்அமைந்துள்ள, 550 மெகா வாட் திறனுள்ள, டோபஸ் சோலார் பூங்கா ஆகியவையே தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பெரிய சோலார் மின்திட்டங்களாகும். கர்னுால் சோலார் பூங்காவை, இம்மாத இறுதியில், பிரதமர் மோடி, திறந்து வைக்க உள்ளார்
தமிழ் இணைய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here