🍎 உ.பி - கழிப்பறை சுத்தம்;
🍏 கண் காணிக்க ஆசிரியர்கள்
🥀 உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
🥀 இந்நிலையில், உ.பி., மாநிலத்துக்கான துாய்மை இந்தியா திட்ட ஊரக இயக்குனர் விஜய் கிரண் ஆனந்த், அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
🥀 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக, பள்ளி வளாகத்திலேயே தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
🥀 அவற்றை, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களே சுத்தம் செய்கின்றனர்.
🥀 தெருக்களை சுத்தம் செய்பவர்களே, இப்பணியில் ஈடுபடுவதால், கழிப்பறைகளை சரிவர சுத்தம் செய்வதில்லை.
🥀 கழிப் பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், துப்புரவு ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக