*_🌴✴🇮🇳தமிழ் இணைய செய்திகள்🇮🇳✴🌴_*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴தேனி அருகே பள்ளிப் பேருந்தில் ஆட்டோ மோதி விபத்து : மாணவன் உயிரிழப்பு_*
தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் பள்ளிப் பேருந்தில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற பிரகாஷ் என்ற 14 வயது பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். மேலும் ஆட்டோவில் இருந்த மற்றொரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
*_✴🇮🇳✴ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் காயம்_*
பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
*_✴🇮🇳✴தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு!_*
சென்னை: தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையுள்ளதை அடுத்து பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
*_✴🇮🇳✴மோகனூர் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்ட 488 பேர் மீது வழக்கு_*
நாமக்கல்: மோகனூர் அருகே ஒருவந்தூர் கிராமத்தில் மணல் குவாரியை செயல்பட விடாமல் தடுத்ததாக 488 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி ஊர்வலம் செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 488 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓருவந்தூரில் புதிதாகத் திறக்கப்பட்ட மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து குவாரியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் இணைய செய்திகள்
*_✴🇮🇳✴திமுக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாளை தொடங்குகிறது_*
சென்னை: சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அவரவர் வீட்டின் அருகே நடும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மரக்கன்றை ஓராண்டு பராமரிப்பவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
*_✴🇮🇳✴கோவை குற்றாலம் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி_*
கோவை: கோவை சிறுவாணி மலைப்பகுதியில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராக இருப்பதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴
*_✴🇮🇳✴மணிப்பூரில் குண்டு வெடித்து ராணுவ வீரர் ஒருவர் பலி_*
உக்ருல்: மணிப்பூரில் குண்டு வெடித்து ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். உக்ருல் மாவட்டத்தில் அதிகாலையில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
*_✴🇮🇳✴தருமபுரி அருகே மதுவில் போதைபவுடர் கலந்து குடித்த 3 பேர் மரணம்_*
தருமபுரி: ஏரியூரில் மதுபானத்தில் போதைப்பவுடர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு பச்சையப்பன், விஜி உள்ளிட்ட 3 பேர் மதுபானத்தில் போதைப் பவுடரை கலந்து குடித்துள்ளனர். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனிற்றி 3 பேரும் உயிரிழந்தனர்.
*_✴🇮🇳✴ஈரோட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை இருமடங்கு உயர்வு_*
ஈரோடு: ஈரோட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.60க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.
*_✴🇮🇳✴கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் கசிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு_*
தஞ்சை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் குழாயில் இருந்து எண்ணெய் கசியும் இடங்களில் புகை வருவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கதிராமங்கலத்தை சேர்ந்த மக்கள் புகார் அளித்துள்ளனர்.
*_✴🇮🇳✴ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க மாட்டார்_*
பாட்னா: ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமாருக்கு பதில் பீகார் மின்சார துறை அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் இன்று இரவு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴
*தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவிகாலம் நீட்டிப்பு.*
*தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் தொடர்வார்.*
*கூடுதல் பொறுப்பு வகிக்கும் ராஜேந்திரன் நிரந்தர டிஜிபியாகிறார்.*
*உளவுத்துறை இயக்குநராக உள்ள ராஜேந்திரன் இனி டிஜிபி பதவியில் மட்டும் தொடர்வார்.*
*பதவிக்காலம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் பதவி நீட்டிப்பு.*
*காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு: ராமதாஸ்.*
*காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு தரும்: ராமதாஸ்.*
*காவிரி மேலாண்மை வாரியம் பற்றி அறிவிக்காவிடில் ஜனாதிபதி தேர்தலை பாமக புறக்கணிக்கும் -ராமதாஸ்.*
*நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.*
*தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு விலக்களிக்க கோரிக்கை.*
*மனு பதிவுசெய்யப்பட்ட பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக