4⃣ நாளில் புழல் ஏரியும் வறண்டுவிடும்😱;உச்சக்கட்ட தண்ணீர்💧 பஞ்சத்தில் சென்னை
சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வரும் 4⃣ ஏரிகளில் 3⃣ ஏரிகள் ஏற்கெனவே வறண்டுவிட்ட நிலையில், கடைசி ஆதாரமான புழல் ஏரியும்💧 வேகமாக வறண்டு வருகிறது. இதனால் சென்னைக்கு கடுமையான குடிநீர்ப் பஞ்சம் வரவுள்ளது😢.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான வீராணம் ஏரி வறண்டு போனது. கிருஷ்ணா கால்வாய் குடிநீரும் நின்றுபோனது. இதனால் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
இதையடுத்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீரை சுத்தகரித்து சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. இருந்தும் தண்ணீர் போதாத நிலையில்தான் உள்ளதாம்😱.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக