Breaking news - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

Breaking news

      *#BREAKING NEWS#*
தமிழ் இணைய செய்திகள்
   http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு - வருமானவரித்துறை அதிகாரிகள்

*🔴வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணி: ஃபேஸ்புக்குடன் இணைந்த தேர்தல் ஆணையம்*

ஃபேஸ்புக்குடன் இணைந்து வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான நினைவூட்டலுக்காக ஃபேஸ்புக்குடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது. அதன்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக பெயர் சேர்த்தல் குறித்து நினைவூட்டலை ஃபேஸ்புக் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 4ம் தேதி வரை வழங்கும்.

அந்த நினைவூட்டலை பேஸ்புக் பயனாளர்கள் க்ளிக் செய்யும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையத்தின் புதிய வாக்காளர் பதிவு பக்கத்துக்கு இட்டுச் செல்லும். இந்த முறை தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக் பயனாளர்களுக்குச் செல்லும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக முதல்முறையாக தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக்குடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது

*ஒருவந்தூர் மணல் குவாரி தற்காலிகமாக மூடல்*

நாமக்கல் மாவட்டம் ஓருவந்தூரில் புதிதாகத்திறக்கப்ட்ட  மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து குவாரியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் மணல் குவாரிக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டு கைதான 500 பேர் விடுவிக்கப்பட்டனர்.

*கூடங்குளம் அணுமின் நிலைய 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்...*

*அணுஉலை கட்டுமான பணிகளை இந்திய அணுமின் கழக தலைவர் சதிஷ்குமார் சர்மா தொடங்கி வைத்தார்...*
--------

*இவர் நடிகர் என்பதை காட்டிவிட்டார்*

*தமிழர் என்ற முறையில் காவிரி நதிநீரை கேட்பது எங்களது உரிமை - பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் பேச்சு*

*சுப.உதயகுமாரை கைதுசெய்ய 2 வாரங்களுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

*முன்ஜாமீன் கோரி சுப.உதயகுமார் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.*

*வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு என்னை கைதுசெய்ய போலீசார் முயற்சி - உயதகுமார் மனுவில் தகவல

*சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் பாதியாக குறைந்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்தியவங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தகவல்*

*சுவிஸ் வங்கியில் இந்திய பணம் ரூ.4 ஆயிரத்து 500 கோடி டெபாசிட் - சுவிட்சர்லாந்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தகவல்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here