தமிழ் இணைய செய்திகள்
07/07/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
சென்னை ராயபுரத்தில் குடிநீருக்காக பெண்கள் ஆண்களுக்குள் சண்டை துவங்கி விட்டது. மேலும் தொடர்ந்தால் விபரீதங்கள் நடக்கலாம்
ஜி.எஸ்.டி., : டில்லியில் இன்று வர்த்தகர்கள் ஆலோசனை
ஜி20 மாநாடு ஜெர்மனியில் இன்று துவக்கம்
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்
4 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது; சினிமா தியேட்டர்கள் இன்று இயங்கும்
நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
ஆத்தூர் அருகே 40 பவுன் நகை கொள்ளை
தமிழ் இணைய செய்திகள்
கோஹ்லி, கார்த்திக் அசத்தல்; கோப்பையை கைபற்றியது இந்தியா
ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு
இன்று தியேட்டர்கள் திறப்பு; முன்பதிவு துவக்கம்
மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது.
தமிழ் இணைய செய்திகள்
'வே 2 ஆன்லைன்' என்ற நிறுவனம், 3.50 லட்சம் பேரிடம், ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது .இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி., குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை.தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர்.தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி.,குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர். தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, 'ஒரு நாள் வீடு' என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில், உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதுகேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, 'ஒரு நாள் வீடு' என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில்,உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு,ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
'ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எம்.பி., -எம்.எல்.ஏ.,க்களுக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் உத்தரவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறதுகேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறது
தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறதுதடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறது
தமிழ் இணைய செய்திகள்
கோலி அதிரடி..! கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5-வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது போட்டி ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான், முதல் ஓவரிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ரஹானே 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் கோலியுடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடிய கோலி 100 ரன்களை கடந்தார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில் இந்தியா 36.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றிய
*தமிழக மீனவர்கள் அத்துமீறினால் உடனே கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரா.*
*இலங்கை அரசின் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: அமைச்சர் மஹிந்த அமரவீரா.*
*இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம், மீன் பிடிப்பதை தடுக்க கடற்படைக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: அமைச்சர்.*
*தடை செய்யப்பட்ட லைலா, நைலா, சுருக்கு, இரட்டைமடி வலைகளை பயன்படுத்த கூடாது என நிபந்தனை: அமைச்சர் மஹிந்த அமரவீரா.*
*நிபந்தனையை மீறும் உள்ளூர், சர்வதேச மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை, ரூ20 கோடி அபராதம் : அமைச்சர் மஹிந்த அமரவீரா.*
*டெல்லி : தில்ஷாத் கார்டன் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு.*
*புதுடெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.*
*தில்ஷாத் கார்டனில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.*
*தீ விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.*
*காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.*
*ரயில்வேதுறை முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு - ஓட்டல்களுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக புகார்.*
*சிபிஐ வழக்குப்பதிவை தொடர்ந்து லாலு பிரசாத்துக்கு சொந்தமான 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை.*
*லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகன் மீதும் சிபிஐ புதிய வழக்குப்பதிவு.*
*கோயம்பேட்டில் வேகத்தடையில் வேகமாக சென்ற பேருந்தில் பயணம் செய்த வருவாய் ஊழியர் உயிரிழப்பு;பேருந்து நிலைய வளைவு முன் வேகமாக இயக்கியுள்ளார் ஓட்டுநர்*
*இடுக்கியில் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரள மாநிலம் போடி முந்தல் சோதனைச் சாவடியில் தமிழக வாகனங்கள் திருப்பு அனுப்பப்படுகின்றன*
தமிழ் இணைய செய்திகள் *தென்காசி : குற்றால அருவிகளில் குறைந்து காணப்படும் நீர்வரத்து - சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவு*
*வேலூர் : இராணிப்பேட்டை அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக