சென்னை: தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம்.
தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக