ஓரே நாளில் ரூ.25,000 கோடியை சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்.. அடித்தது பம்பர் லாட்டரி..! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஓரே நாளில் ரூ.25,000 கோடியை சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்.. அடித்தது பம்பர் லாட்டரி..!






சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.

எப்படி..? பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. இதன் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் உயரும் எனக் கணிப்புகள் வெளியானது

அடித்து நொறுக்கியது.. பேஸ்புக் நிறுவனம் கணிப்புகளை அடித்து நொறுக்கி சுமார் 45 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2015ஆம் ஆண்டை விடவும் குறைவாக இருந்தாலும் 2வது பெரிய வளர்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் மட்டும் பேஸ்புக் சுமார் 9.16 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.

பங்கு மதிப்பு பேஸ்புக்-இன் காலாண்டு முடிவு அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளைப் பெற்றது இதன் காரணமாக, வியாழக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது

3.8 பில்லியன் டாலர் இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்.

50 சதவீத வளர்ச்சி 2017 ஜனவரி மாதத்தில் இருந்து பேஸ்புக் நிறுவனப் பங்குகள் சுமார் 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் ஜூக்கர்பெர்க்-இன் சொத்து மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

5வது இடம் இந்தத் திடீர் உயர்வின் மூலம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 72.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்

மீண்டும் முதல் இடம்.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இன்று பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பல வருடங்களாக இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் இன்று 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்தப் பின்னடைவு சுமார் 4 மணிநேரம் நீடித்தது. இதன் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் மீண்டும் தனது ஆஸ்தான முதல் இடத்தை 89.8 பில்லியன் டாலர் மதிப்புடன் பிடித்தார்.

ஜெப் பீசோஸ் நேற்று உலகமும் முழுவதிலும் தலைப்பு செய்தியென்றால் அது ஜெப் பீசோஸ் பற்றித்தான். பில்கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி சுமார் 4 மணிநேரம் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சுகத்தை அனுபவித்த ஜெப் பீசோஸ் 88.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 2வது இடத்திற்குச் சரிந்தார்.

3வது இடம் அமான்சியோ ஓர்டிகோ 83.1 பில்லியன் டாலர் மதிப்புடன் 3வது இடத்தையும் பிடித்தார்.

4வது இடம் சில மாதங்களுக்கு முன்பு 2வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் அதிகளவிலான நன்கொடையின் காரணமாகத் தற்போது 74.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்

நம்ம தல.. 5வது இடத்தில் இன்றைய நாயகன் மார்க ஜூக்கர்பெர்க் 70.9 பில்லியன் டாலருடன் உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here