ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்புக்கு நிற்கும் இரு ராணுவ வீரர்களில் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டு வரும்போது அவருக்குப் பதிலாக மற்றொரு ராணுவ வீரர் பாதுகாப்புக்கு நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி பதற்றம் நிறைந்ததாக இருந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் இப்பகுதியில் 93 சதவிகிதம் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் ராணுவத்தினர் இரவு பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஸ்ரீநகர் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தது. அதில் ஓர் இஸ்லாமிய வீரர் தொழுகையில் ஈடுபடும்போது அவருக்குப் பதிலாக சக வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘இதுதான் இந்தியா, பல வேறுபாடுகள் நாட்டுக்குள்ளே இருந்தாலும் அனைத்தையும் கலைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே எங்கள் சிறப்பு’ என இந்த புகைப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக