துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு எதிர்ப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு எதிர்ப்பு!


துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்குத் தங்களது ஆதரவு இல்லை என்று ஐக்கிய ஜனதாதள கட்சி நேற்று தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் மீது கடந்த ஜூலை 7ஆம் தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததைத்தொடர்ந்து, அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கால அவகாசம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த ஜூலை 26ஆம் தேதி கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ-க்கள், ஜூலை 26ஆம் தேதி இரவு நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததையடுத்து, பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, 132 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பட்டியலை நிதிஷ்குமார் வழங்கினார். அதைத்தொடர்ந்து, ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றார். அதன் பின்னர், சட்டசபையில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியுடன் முதலமைச்சராக அவர் பதவியில் நீடிக்கும் நிலையில், ஜூலை 29ஆம் தேதி அவரது அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. அதில் புதிதாக 27 அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது எதிர்கட்சிகள் வரிசையில் இருந்த நிதிஷ்குமார், பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பீகாரில் ஏற்பட்ட தொடர் அரசியல் மாற்றத்தையடுத்து, பாஜக ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவை ஆதரிக்காமல், எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரித்துள்ளது பாஜக-வுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இதுகுறித்து ஐக்கிய ஜனதாதள கட்சியின் பொது செயலாளர் கே.சி.தியாகி நேற்று ஜூலை 30ஆம் தேதி பாட்னாவில் கூறுகையில், “துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவு இல்லாத நேரத்தில், பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்த ஐக்கிய ஜனதாதளம், தற்போது பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ள நிலையில் கைகளை நனைத்த ஈரம்கூட காய்வதற்குள் பாஜக-வுக்கு எதிராக முடிவெடுத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here