குஜராத் கடற்பகுதியில் ரூ.3,500 கோடி மதிப்பிலான 1500 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் கடற்பகுதியில் வணிக கப்பல் ஒன்றில் இருந்து 1500 கிலோ ஹெராயினை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3,500 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்திர பவாக் இன்று ஜூலை 30 மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போதைப்பொருள் ஏற்றிவந்த கப்பலை பார்த்துள்ளது. பின்னர் வழி மறித்து சோதனை செய்தபோது அதனுள் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடற்படை, கலால்துறை மற்றும் காவல்துறை இணைந்த கூட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து பாதுகாப்புத் துறை பிஆர்.ஓ. அபிஷேக் மதிமான் விடுத்துள்ள அறிக்கையில், “உளவுப்பிரிவு தகவல்களைக் கொண்டு இந்திய கடலோர காவல்படை போலீஸ் கப்பல், குறிப்பிட்ட வணிக கப்பலை மறித்துச் சோதனையிட்ட போது, போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்பகுதியில் முதன்முறையாக இதுபோன்று அதிகளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக