சீனா போருக்குத் தயார்! ...... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சீனா போருக்குத் தயார்! ......


சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா – சீனா - பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்றுசேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது.

சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்கு குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்காவும் கோரியது. இந்நிலையில், இந்திய - சீன எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. ஆனால் இந்தியா, படைகளைத் திரும்பப் பெறவில்லை.

இந்நிலையில், சீன ராணுவத்தின் 90ஆவது ஆண்டு விழா ஜூலை 3௦ஆம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சீனாவில் மாபெரும் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்நாட்டு அதிபர் க்சி ஜின்பிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சீனா மீது, உலகின் எந்த நாடு போர் தொடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்களுடைய ராணுவத்தால் எந்த எதிரிகளையும் வீழ்த்த எங்களால் முடியும்.

அதேபோல் நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நோக்கங்களையும் நமது ராணுவம் பாதுகாக்கும். உலக அமைதியைப் பாதுகாக்கவும், மிகப்பெரிய புத்தாக்கத்துடன் முழு வல்லமை பொருந்திய நாடாகச் சீனா உருவெடுக்கவும் புதிய அத்தியாயத்தை எழுதும் ஆற்றலும் நம்பிக்கையும் நமது ராணுவத்துக்கு உண்டு. போர்க்கலை மற்றும் முப்படைகளின் தரத்தை நாம் மேலும் நவீனமயமாக்க வேண்டும். உலகின் முதல்தர ராணுவத்தைக்கொண்ட நாடாக சீனா உயர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here