அரசு ஊழியர் அரசியல் இயக்கம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடலாமா ..? விளக்கம் .. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர் அரசியல் இயக்கம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடலாமா ..? விளக்கம் ..

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தாலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் யின் ஷாகாவில் கலந்து கொண்டாலோ அவர்கள் அரசு உத்தியோகங்களிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இராம் சங்கர் ரகுவன்ஷி என்ற நகராட்சி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங்குகொண்டதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தன்னை உத்தியோகத்திலிருந்து நீக்கம் செய்தது தவறு என்று கூறி அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் சட்ட விரோதமாக செயல்படுகிற இயக்கம் என்றோ அல்லது நாட்டை கவிழ்க சதி வேலைகளில் ஈடுபடுகின்ற இயக்கம் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமும் இல்லை. அப்படிபட்ட சூழ்நிலையில் அந்த இயக்கத்தில யார்வேண்டுமானாலும் பங்கு எடுத்துக்கொள்ளலாம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படை உரிமைகளில் ஒன்று கருத்து சுதந்திரமும் தனக்கு விருப்பட்ட கொள்கையை பின்பற்றுவதுமாகும். இந்திய குடிமகனாகிய ஒருவர் தனக்கு பிடித்த இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் அதன் செயலபாடுகளில் ஈடுபடலாம் அதற்காக அவரை வேலையிலிருந்து நீக்குவது அடிப்படை உரிமை மீறலாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே இராம் சங்கர் ரகுவன்ஷிக்கு அவருடைய வேலையை அவருக்கு திரும்ப தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தவிதிமுறை இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பொருந்துமெனலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here