- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🚨தமிழ் இணைய செய்திகள்🚨*

               25/07/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*இன்றைய(ஜூலை- 25) பெட்ரோல், டீசல் விலை?*

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது*

*பெட்ரோல், டீசல் விலை விபரம்:*

*எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.57.94காசுகளாகவும் உள்ளன*

*இந்த விலை இன்று(ஜூலை- 25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது*

🔴

*-நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்கிறார்.தமிழ் இணைய செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள் *-

*இதற்கான விழா ஏற்பாடு டெல்லியில் மும்முரமாக நடந்து வருகிறது.*

*நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பகல் 12.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் கோவிந்துக்கு இந்தியாவின் தலைமை நீதிபதியான ஜேஎஸ் கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.*

*அப்போது 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.*

*விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.*
🔴

*டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அபார வெற்றி*

*கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் தமிழ்நாடு பிரிமியர் லீக் என்னும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று சேப்பாக்கம் அணியும் திருவள்ளூர் அணியும் மோதின*

*முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.*

*இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே கோவை கிங்ஸ், ஆல்பர்ட் தூத்துக்குடி அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔴

*'இன்று அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை.*

*இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

*தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.*

*தமிழகத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.*

*கடலோர மாவட்டங்களை காட்டிலும் உள்மாவட்டங்களில் இயல்வை விட 3 முதல் 4 டிகிரி அதிக வெப்பம் நிலவும்.*

🔴

*மீனவர்கள் மீண்டும் கைது.*

*நெடுந்தீவு அருகே மீன்பிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3பேர் இலங்கை கடற்படையால் கைது.*

*கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.*

_கொடுங்கையூரில் கடந்த 15-ஆம் தேதி பேக்கரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயற்சி நடந்த போது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்த கண்ணதாசன் நகரைச் சேர்ந்த இளையராஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது._

🔴

*சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 4-ஆக உயர்வு.*

*சிவகாசி அருகே 20-ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.*

*3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.*

🔴தமிழ் இணைய செய்திகள்

*சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 71வது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின*

🔴

*சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.33 லட்சம் கையாடல்- ஊழியர்களிடம் போலீசார் விசாரணை*

🔴
*கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக பொதுமக்களின் காத்திருப்பு போராட்டம் 9வது நாளாக தொடர்கிறது*

🔴

*அசாம்: கோக்ரஜாரில் ராணுவம், போலீஸ் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை*

🔴

*கிருஷ்ணகிரி அருகே மனைவி குமுதா மற்றும் மகள் சகுந்தலாவை கொலை செய்ததாக சேஷாத்திரி என்பவர் காவல்நிலையத்தில் சரண்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here