- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள்

        04/07/2017

*பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 4) எவ்வளவு?*

_பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 4) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது_

*பெட்ரோல், டீசல் விலை விபரம்:*

_எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 5 காசுகள் குறைந்து ரூ.65.46 காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 4 காசுகள் குறைந்து ரூ.56.25 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-04) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது_

*பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார்*

_3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை-4) இஸ்ரேல் செல்கிறார்._

*இஸ்ரேல் பயணம்:*

_அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த உள்ளார்._

*முதல்முறை:*

_இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதன் நினைவாக பிரதமரின் இந்த பயணம் அமைகிறது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை._

*மீண்டும்..*

_முன்னதாக கடந்த வாரம் இரு நாட்கள் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, பின் ஐரோப்பிய நாடான நெதர்லாந்து சென்றார். பின் நாடு திரும்பிய மோடி, கடந்த ஜூன் 30 நள்ளிரவில், ஜி.எஸ்.டி., வரியை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், இன்று மீண்டும் மோடி, வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்._

*தீப்பெட்டி ஆலைகளுக்கான 18% ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி ஆலைகளின் வேலை நிறுத்தம் 4வது நாளாக தொடர்கிறது*

*கோவில்பட்டியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் 4வது நாளாக மூடல்; 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு

*கன்னியாகுமரி: லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு; 3பேருக்கு படுகாயம்;ராமநாதபுரம் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்*

*புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விடிய விடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்*

*சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கைது ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை.*

*ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்ததாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஆரூண் என்பவரை ராஜஸ்தான் போலீசார்   கைது செய்தனர்.*

*ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த ஆரூணை அதிகாலையிலே அழைத்துச் சென்றனர் பின்னர் கைது செய்தனர்.*

*ஐ.எஸ் இயக்கத்துக்கு நிதி, ஆட்களை திரட்டிய புகாரில் கைது என ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் தகவல்.*

*தினகரன் திடீரென சென்னையில் இருந்து விமானம் முலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.*

*ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை*

*நாகையில் வரும் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு.*

*நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 8-ம் தேதி விடுமுறை என்று ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.*

*நாகூரில் உள்ள நாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.*

*சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.*

*சபாநாயகர் தனபால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.*

*காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.*

*சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தனபாலை நலம் விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனைக்கு விரைவு.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here