வெளிநாடுகளில் சென்று குடியேற எண்ணுபவர்கள் பட்டியலில் இந்தியா முன்னிலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வெளிநாடுகளில் சென்று குடியேற எண்ணுபவர்கள் பட்டியலில் இந்தியா முன்னிலை


வெளிநாடுகளுக்கு சென்று குடியேற எண்ணுபவர்கள் பட்டியலில்
இந்தியா

2வது இடத்தில் உள்ளது.இது தொடர்பாக குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 2010 - 15ல் சர்வதேச அளவில் 1.3 சதவீதம் வயதில் மூத்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் தென் ஆப்ரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளனர்.வெளிநாட்டில் குடியேற திட்டமிடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நைஜீரியா உள்ளது. தொடர்ந்து, இந்தியா, காங்கோ, சூடான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில் 48 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியேற எண்ணினர். அவர்களில் 35 லட்சம் பேர் இதற்கான திட்டங்களில் இறங்க, 13 லட்சம் பேர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.நைஜீரியாவில் 51 லட்சம் பேரும், காங்கோவில் 41 லட்சம் பேரும், சீனா மற்றும் வங்கதேசத்தில் தலா 27 லட்சம் பேரும் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here