ஜிப்ரான் இசையில் நயன்தாரா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜிப்ரான் இசையில் நயன்தாரா


தமிழ் திரைப்பட நாயகிகளில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி நயன்தாரா நடிப்பில் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவிருக்கும் அறம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் பாடல்கள் நேற்று (ஜூலை 28) வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் KRJ Studios ராஜேஷ் தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜிப்ரான் இசையமைத்துள்ளர். நேற்று சூரியன் FM நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் தைரியமான பெண் கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அதிரடி திருப்பங்களுடன் சமூக பிரச்சனையை சொல்லும் படம் இது என்று இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் கோபி நயினார், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here