வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்!
வடகொரியா - ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அடிக்கடி அணு ஆயுத சோதனைகள் நடத்தி நிகழ்த்தி உலக நாடுகளை மிரட்டும் நாடு வட கொரியா. உலக நாடுகள் பலவும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அளவுக்கு கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றன.
உலகமே எதிர்க்கும் போதும் அசால்ட்டாக தன் பயங்கர சோதனைகளை நடத்திக்கொண்டிருக்கும் வடகொரிய அரசின் தெனாவட்டுக்கு காரணம் என்ன? என்பது புதிராக இருந்தது வந்தது. ஆனால், இதற்கான பதில் இப்போது வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் பொருளாதார வலிமையைத் தீர்மானித்து வருவது அந்நாட்டில் புழங்கும் போலி அமெரிக்க டாலர்கள்தான். இப்போது, அவர்களுக்கு சீனாவில் இருந்தும் போலி அமெரிக்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.
வட கொரியாவில் உள்ள பியோங்யாங்கில் உள்ள ‘ரூம் 39’ என்ற அறை இந்த போலி அமெரிக்க டாலர்களின் தோற்றுவாயாக உள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடத்தும் தைரியத்திற்கும் பலத்திற்கும் இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. பியோங்கியாங்கில் உள்ள தொழிலாளர்கள் கட்சி கட்டிடத்தில் உள்ளது இந்த அறை. இந்த அறைக்குள் சட்டதிற்கு புறம்பான நடவடிக்கைகளே முழுக்க முழுக்க அரங்கேறி வருகின்றன. ஆனால், அந்த அறையில் என்னென்ன மர்மங்கள் இன்னும் ஒளிந்திருக்கின்றன என்பது பெரும் மர்மமாகவே நீடிக்கிறது.
:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக