கிரிமினல் வழக்கை மறைத்த நிதீஷ் குமார் ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிரிமினல் வழக்கை மறைத்த நிதீஷ் குமார் ?


பீகார் மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக முதல்வர் நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றது.

கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாநில கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீதாராம் சிங் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தின்போது, மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நிதீஷ் குமார் உட்பட 15 பேர் மீது அப்போது கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது பீகார் மாநில முதல்வராகப் பதவி வகிக்கும் நிதீஷ் குமார் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால், பீகார் மாநில மேல்சபை உறுப்பினராக அவர் வகித்து வரும் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், நிதீஷ் குமார் தன் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்து மேல்சபை தேர்தலில் போட்டியிட்டு வென்றது செல்லாது. எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக நிதீஷ் குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதாவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, பீகாரில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் நிதீஷ் குமாரும் ஒரு கிரிமினல் குற்றவாளிதான் என்று கடந்த ஜூலை 29ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here