*♏🌎🌎செஸ் விளையாட்டில் சாதனை... அசத்தும் அரசுப் பள்ளி!!!* புத்திக்கூர்மையைத் தரும் விளையாட்டான செஸ்ஸில் சாதனை படைத்துவருகிறார்கள், விருதுநகர் மாவட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*♏🌎🌎செஸ் விளையாட்டில் சாதனை... அசத்தும் அரசுப் பள்ளி!!!* புத்திக்கூர்மையைத் தரும் விளையாட்டான செஸ்ஸில் சாதனை படைத்துவருகிறார்கள், விருதுநகர் மாவட்டம்

புத்திக்கூர்மையைத் தரும் விளையாட்டான செஸ்ஸில் சாதனை படைத்துவருகிறார்கள், விருதுநகர் மாவட்டம் சாலைமரைக்குளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளை மூட அரசு தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
செஸ் விளையாட்டு ஒருங்கிணைப்பாளரும் இப்பள்ளியின் ஆசிரியருமான சுகுமாரிடம் பேசினோம், ‘’இப்பள்ளியில், மொத்தம் 147
மாணவர்கள் படிக்கின்றனர்.

சென்ற கல்வியாண்டில், காரியாப்பட்டி யூனியன் அளவிலான பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட செஸ் போட்டியில், எங்கள் பள்ளி மாணவர்களையும் கலந்துகொள்ளவைக்க முடிவு செய்தோம். ஆனால், செஸ் விளையாட்டுக்கான அடிப்படை புரிதல் ஏதும் மாணவர்களுக்கு இல்லை.

தனியாக ஒரு செஸ் பயிற்சியாளரை அழைத்து வந்து, செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு 2 வாரம் பயிற்சி அளித்தோம்.

சிறந்த 2 மாணவர், 2 மாணவிகளை யூனியன் அளவிலான போட்டியில் கலந்துகொள்ள வைத்ததில், 4 பேருமே வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்வாகி, அதில் 2 பேர் முதல், இரண்டு இடங்களைப் பெற்று, மண்டல அளவிலான போட்டியில் ரோஷினி என்ற மாணவி வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதியானார். ஆனால், மாநிலப் போட்டியில் தோற்றார்.

வெறும் 2 வாரப் பயிற்சியை வைத்துக்கொண்டு மாநிலப் போட்டி வரை எங்கள் பள்ளி மாணவி கலந்துகொண்டது பெரிய விஷயம்தான்.

இப்போது, 50 மாணவ -மாணவிகளுக்கு வாரந்தோறும் திங்கள், புதன் கிழமைகளில் மதியம் 4 மணிக்கு மேல் பள்ளியிலேயே பயிற்சி அளிக்கிறோம். வீடுகளில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பாக்களுக்கும் செஸ் சொல்லிக்கொடுத்து, அவர்களுடன் விளையாடி, தீவிரப் பயிற்சி எடுத்துவருகிறார்கள். பொதுவாக, பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவதால், புத்திக்கூர்மை அடைவதோடு பிரச்னைகளை எளிதாகக் சமாளிப்பது, தெளிவான முடிவெடுப்பது ஆகிய திறன்கள் வளரும். எங்க பள்ளியில் செஸ் பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிடம் சான்றிதழ், பதக்கம், கோப்பைகள்  உள்ளன.

இந்த வருஷம் மாநிலம், தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம்’’ என்றார் நம்பிக்கையுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here