🌤🗞காலை 🗞செய்திகள் 🌤🗞
🌤🗞05\09\17🌤🗞
🌤🗞🌤🗞🌤🗞🌤🗞🌤🗞🌤
🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤
🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞
🌤🗞கும்பக்கரை அருவியில் 4வது நாளாக குளிக்க தடை
தேனி: பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
🌤🗞ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் தோல்வி அடைந்த சோனி
ஐபிஎல் போட்டிகள் 10 சீசன் முடிந்துவிட்ட நிலையில் 11வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் 11 முதல் 15 வரை அடுத்த ஐந்து சீசன் ஒளிபரப்புக்கான உரிமம் குறித்த ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டியை கடந்த பத்து வருடங்களாக ஒளிபரப்பி வரும் சோனி நிறுவனத்திற்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் கடும் போட்டியிருந்த நிலையில் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றது.
அனிதாவின் தற்கொலைக்கு பின்னால் திமுகவின் தூண்டுதல் இருக்கலாம் என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அறிவிப்பைக் கண்டு திமுக கலக்கம்.
🌤🗞ரூபாய் நோட்டு தடை மூலம் கருப்பு பணம் ஒழிந்ததா?....நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் ரிசர்வ் வங்கி பரபரப்பு அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த ரூபாய் நோட்டு தடை உத்தரவு மூலம், நாட்டில் கருப்புபணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது.
🌤🗞சென்னை வேளச்சேரியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.2.75 கோடி பறிமுதல்
சென்னை: சென்னை வேளச்சேரியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.2.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். ரூ.2.75 கோடி பறிமுதல் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் தமிழனிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
🌤🗞எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு ? இன்று நடைபெறும் கூட்டத்தில் தெரியும் !!!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
🌤🗞திருமணத்தில் மொய் எழுதுவதுபோல நூதன திருட்டு - புதுசு புதுசா கிளம்புறாங்களே.
தூத்துக்குடியில் நடந்த திருமணம் ஒன்றில் மொய் எழுதுவதுபோல நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
🌤🗞பிரிக்ஸ்' மாநாடு இன்று நிறைவு
சியாமென்: மூன்று நாட்கள் நடைபெறும் 'பிரிக்ஸ்' மாநாடு இன்றுடன்(செப்.,5) நிறைவடைகிறது.இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு, 'பிரிக்ஸ்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின், ஒன்பதாவது உச்சி மாநாடு, சீனாவின் சியாமென் நகரில் நடக்கிறது. நேற்று முன்தினம்(செப்.,3) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இந்த மாநாட்டின் நேற்றைய நாளில், பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிலையில் இன்றுடன் 'பிரிக்ஸ்' மாநாடு நிறைவு பெறுகிறது.
🌤🗞இன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.25 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
🌤🗞சட்ட மேலவை தேர்தல்: யோகி இன்று வேட்புமனு தாக்கல்
லக்னோ: உத்தர பிரதேசதத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர்கள், கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோர், அம்மாநில சட்டமேலவை தேர்தலில் போட்டியிட, இன்று(செப்., 5) வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
🌤🗞நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் வெடிக்கும் போராட்டங்கள்.
அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்றன. கல்லூரில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
🌤🗞மதிமுகவின் தலைமையை சமூக வலைதளங்களில் விமர்சித்த அக் கட்சியினர் இருவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, இணையதளங்களில் கட்சி முடிவுகளை விமர்சிப்பவர்கள் அதிமுகவின் ஒரு அணியின் மறைமுக ஆதரவாளர்களாக இயங்கும் ரகசியம் எனக்கு தெரியும் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கெளதமன் ஆகியோர் பொதுவெளியில் மதிமுகவின் முடிவுகளை விமர்சித்ததாக கூறி கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்தார்.
🌤🗞கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் - கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
திருப்பூர் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திருப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
🌤🗞பரமக்குடி அருகே வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு: 8 லாரிகள் பறிமுதல்
ராமநாதபுரம்: பரமக்குடி பிராமணகுறிச்சி வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து எமனேஸ்வரம் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
🌤🗞தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
🌤🗞வேடசந்தூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி முரளிதரனை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தித் தொடர்பாளர் முரளிதரன் வேடசந்தூரில் வசித்து வருகிறார். இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஃபேஸ்புக்கில் முரளிதரன் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
🌤🗞நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கல்லூரி சாலையில் மூழ்கிய தரைப்பாலம்
கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆண்டிப்பாளையம் கல்லூரி சாலையில் 2வது முறையாக தரைப்பாலம் மூழ்கியுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் 10கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். பல்லடத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது.
🌤🗞10-ம் வகுப்பு வரை தமிழ்: நவோதயா உறுதி
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
🌤🗞ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து.
🌤🗞ஆரணி அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார்
சாராயம் விற்றதாக ஏழுமலையை களம்பூர் காவல் நிலையத்திற்கு போலீஸ் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியது.
தற்போது ஏழுமலையின் உடல் ஆரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
🌤🗞திருவாரூர் நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தினகரன் ஆதரவாளர்கள் நுழைந்ததால் பரபரப்பு
🌤🗞புழல் ஏரிப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: நீர் மாசுபடும் அபாயம்
புழல் ஏரிப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர் திறந்துவிடப்படுவதாலும் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
🌤🗞நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும்? மக்கள் காத்திருக்காங்க..மோடியை கலாய்த்த சிவசேனா
‘நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும்? மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா
பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகும் மோடி அரசின் பரிசோதனை முயற்சி தொடர்ந்து நீடிப்பதாக, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து சிவசேனா கட்சி கிண்டலடித்து உள்ளது.
🌤🗞ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்
சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
🌤🗞🌤🗞🌤🗞🌤🗞🌤🗞🌤
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக