தனியார் மெட்ரிக் பள்ளியே மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம்! தனியார் பள்ளிகளா, கொலைக்கூடங்களா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனியார் மெட்ரிக் பள்ளியே மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம்! தனியார் பள்ளிகளா, கொலைக்கூடங்களா?

தனியார் மெட்ரிக் பள்ளியே
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம்!
தனியார் பள்ளிகளா, கொலைக்கூடங்களா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) ஒரு பள்ளி மாணவி படிப்புக் காரணத்தை
முன்னிட்டு தற்கொலை செய்து கொண்டால்,
அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பா இல்லையா?

2) தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி அனிதா, நீட்
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை
செய்து கொண்டார். இதற்கு அவர் படித்த அந்தத்
தனியார் பள்ளி பொறுப்பேற்க வேண்டும் அல்லவா?

3) இது ஒரு எளிய தர்க்கம் மட்டுமல்ல; இது ஒரு
அடிப்படையான அம்சம் ஆகும். எனவே மாணவி
அனிதாவின் தற்கொலைக்கு அவர் படித்த
ராஜா விக்னேஷ் மெட்ரிக் பள்ளி பொறுப்பேற்க
வேண்டும்.

4) மாணவி அனிதா குடும்பத் தகராறு காரணமாகவோ
சொத்துத் தகராறு காரணமாகவோ தற்கொலை
செய்து கொள்ளவில்லை. ப்ளஸ் டூவில் 1176 மதிப்பெண்
பெற்ற புத்திக் கூர்மையுள்ள அனிதா, நீட் தேர்வில்
தேர்ச்சி பெறத்  தேவையான SC பிரிவுக்கு உரித்தான
107 மதிப்பெண்களை பெற முடியவில்லை. அவரால்
86 மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது. தோல்வி
அடைந்தார்.

5) இதற்கு அவர் படித்த பள்ளி காரணமா இல்லையா?
அந்தப் பள்ளி பொறுப்பேற்க வேண்டுமா, இல்லையா?
அரசியல் காரணங்கள் உள்ளிட்ட பல காரணங்கள்
இருந்த போதிலும், மாணவி  தோல்வி அடைந்ததில்
பள்ளிக்கு பொறுப்பு உண்டா இல்லையா?
நிச்சயம் உண்டு.

7) பள்ளி எப்படிப் பொறுப்பாகும்? நீட் தேர்வுக்கு 
மாணவர்களைத் தயார் படுத்துவது உட்பட பள்ளிக்கு
பல்வேறு பொறுப்புகள் உண்டு. ஒரே ஒரு
உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.

8) நீட் தேர்வில் 11,12 ஆகிய இரண்டு வகுப்புகளின்
பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப் படுகின்றன.
ஆனால் ராஜா விக்னேஷ் மெட்ரிக் பள்ளியில் 11ஆம்
வகுப்புப் பாடங்களே நடத்தப்படவில்லை. பின் எப்படி
மாணவர்கள் நீட்டில் தேற முடியும்?

9) இந்த உண்மையைச் சொன்னால் தனியார்மயக்
கைக்கூலிகள் பாய்ந்து கொண்டு வருகிறார்கள்.
தனியார்  பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தடிகளை
ஓங்குகிறார்கள். இவர்கள் தனியார்மயத்தை
ஆதரிக்கும் கைக்கூலிகள்.

10) என்னிடம் தற்போது நீட் கேள்வித்தாள் உள்ளது.
அதில் 180 கேள்விகள்; மொத்தம் 720 மதிப்பெண்கள்.
இதில் இயற்பியல் (PHYSICS) பகுதியை இப்போது
எடுத்துக் கொள்வோம்.

11) இதில் உள்ள 45 கேள்விகளில், எந்தெந்தக்
கேள்விகள் 11ஆம் வகுப்பு, எந்தெந்தக் கேள்விகள்
12ஆம் வகுப்பு என்பதை என்னால் சொல்ல முடியும்.

12) 11ஆம் வகுப்பு பகுதியில் (XI portion) இருந்து கேட்கப்பட்ட
கேள்விகளை, 11ஆம் வகுப்பு போர்ஷனே நடத்தப்படாத
நிலையில், எப்படி மாணவர்களால் பதிலளிக்க
இயலும்? எனவேதான் 1176 மதிப்பெண் பெற்ற
அனிதாவால் நீட் தேர்வில் தேற முடியவில்லை.

13) இதை எல்லோராலும் புரிந்து கொள்ள இயலாது.
பாடம் நடத்துகிற ஆசிரியர்கள், இயற்பியல் படித்து
பாடங்களோடு பரிச்சயம் உள்ளவர்கள் மட்டுமே
இதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் கருத்துக்
சொல்ல முடியும். 

12) இந்தக் கேள்வியைப் பாருங்கள். The ratio of wavelengths
of the last line of Balmer series and the last line of Lyman series is:
a) 4 b) 0.5 c) 2 d) 1. இக்கேள்வியின் எண்;157 with respect to
S set of the question paper. (NEET UG 2017). இது எந்த வகுப்புப்
பாடம் என்று தனியார்மயக் கைக்கூலிகளால்
சொல்ல முடியுமா?

13) இதே போல,  மொத்தக் கேள்விகளையும்
பரிசீலிப்போம். 11ஆம் வகுப்பு போர்ஷனில் ,
கிட்டத்தட்ட 50 சதம் கேள்விகள் கேட்கும்போது,
11ஆம் வகுப்புப் பாடத்தையே நடத்தாத போது,
மாணவர்கள் எப்படி நீட்டில் தேற முடியும்?

14) இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு
படிப்போ, அறிவோ இல்லாத கசடுகள், மெட்ரிக்
பள்ளிக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக
கூலிப்படையாக வருகிறார்கள்.

15) அனிதா மட்டுமல்ல, நிறைய மாணவ மாணவிகள்
இம்முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன்
காரணம் 11ஆம் வகுப்பு பாடத்தை தனியார் பள்ளிகள்
நடத்தாமல் விட்டதே என்று அடித்துக் கூறுகிறோம்.

16) அதே நேரத்தில், இந்த ஆண்டு நீட் தேர்வில்
அதிகமான அளவு அரசுப்பள்ளி மாணவர்கள்
தேறி இருக்கிறார்கள் என்பது மருத்துவ
கவுன்சலிங்கை உற்று நோக்கும் துறை சார்ந்த
அறிவு உடையவர்க்கு விளங்கும். அதிகாரபூர்வமான
புள்ளி விவரங்கள் வெளிவரும்போது இதை
அனைவரும் அறிய இயலும்.

17) அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நீட்
தேர்வில் வெற்றி பெறக் காரணமே, அரசுப்
பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தியதுதான்
என்றும் நாங்கள் அடித்துக் கூறுகிறோம்.
**************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here