- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

☀(தமிழ்)   ☀

☀(இணைய) ☀

☀(செய்திகள்)☀

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

இன்று (24.9.17) காலை 10:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியின் *போராளி!* நிகழ்ச்சியில், பல்வேறு தளங்களில் தனியொருவராக தொடர்ந்து CPS பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் சமகால சமூகப் போராளி, *தோழர்.பிரடெரிக் எங்கெல்ஸ்* அவர்களின் சிறப்பு நேர்காணலை பிரத்தியேகமாக ஒளிபரப்பி,

☀JACTTO-GEO-வின் போராட்ட மேன்மையையும்,

☀குறிப்பாக CPS நீக்கக் கோரிக்கையின் தேவையையும்,

☀உள்ளது உள்ளபடி பொதுமக்கள் பார்வைக்குக் கொணர்ந்த,

*☀சத்தியம் தொலைக்காட்சி* செய்தி ஊடகத்திற்கும். . .

மற்றும்,

☀அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்ந்த பொதுமக்களின் பார்வையைக் கேள்விகளாகத் தொடுத்த,

☀CPS பற்றிய கோரமுகத்தை வெளிக் கொணரும் கேள்விகளை விடுத்த,

☀JACTTO-GEO-வின் போராட்டப் பாதை குறித்த பொதுவெளியின் விமர்சனங்களுக்கு விடைதரும் வினாக்களைத் தொடுத்த,

☀தளம் அமைந்துவிட்டா எதிர்க் கேள்விகளை எழுப்பி, எதிர் இருப்போரின் நியாயத்தைப் புரட்டிப்போடும் நெறியாளர்களுக்கு மத்தியில்,

☀தனக்கு வாய்த்த தளத்தின் வழியாய் சமூகப் போராளிகளைத் தொடர்ந்து வெளிச்சப்படுத்தி,

☀செய்தி ஊடகவியலாளருக்கு உரிய சமூக முக்கியத்துவத்தை தொடர்ந்து உணர்த்தி வரும்,

☀நெறியாளர் *தோழர்.சாதிக்* அவர்களுக்கும். . .

மேலும்,

☀ஓய்வூதியமே இல்லாத CPS-ன் பசுத் தோலை ஊடகத்தின் ஊடாயும் உறித்தெறிந்து,

☀ஆசிரியர் அரசூழியர் பற்றிய பொதுப்பார்வையின் தவறான ஒப்பீட்டினை உடைத்தெறிந்து,

☀ஆசிரியர்களும் அரசூழியர்களும் பொதுமக்களின் அங்கம் என்பதைத் தெளிவுபடுத்தி,

☀அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் ஒட்டுமொத்த சமூகத்தின் சூழற்சிக்கானதே என்று சுட்டிக்காட்டி,

☀இயன்றவரைத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி JACTTO-GEO-வின் போராட்ட நோக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,

☀செய்தி ஊடகங்களின் பொது விவாத நிகழ்வுகளில் எழும் வினாக்களுக்குப் போகிற போக்கில் பதிலளிக்கும் நபர்கள் போலின்றி,

☀அரசாணை, தேதி, தொகை உள்ளிட்ட விபரங்களைத் தக்க புள்ளிவிபரங்களுடன் அறுதியிட்டுக் கூறி,

☀ஆசிரியனின் போர்க்குண மேன்மையை வெளிக்கொணர்ந்திட்ட,

*☀தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்டத் துணைச் செயலாளர் தோழர்.பிரடெரிக் எங்கெல்ஸ்* அவர்களுக்கும். . .

*நன்றிகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறது http//:www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here