*சமூக வலைதளங்களில் சராசரியாக 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.*
*தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் புது வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு வகைகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும்.*
*வாட்ஸ்அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க :*
*புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை டீசெலக்ட் செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.*
*ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க :-*
*உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.*
*தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யுங்கள் :*
*செல்போன் தொலைந்தால், வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கிறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ்அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ்அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.*
*எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் :*
*இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ்அப்பில் பகிராதீர்கள்.*
*வாட்ஸ்அப்பை லாக் அவுட் செய்ய மறக்காதீர்கள் :*
*வாட்ஸ்அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.*
*பொதுவான கருத்து :*
*நாம் புகைப்படத்தை ப்ரொஃபைல் பிச்சராக ஏன் வைக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களோடு எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. முக்கியமாக தொலைபேசி எண்ணை பதிவு செய்யக்கூடாது.*
*பெற்றோர்களுக்கு தங்ளுடைய குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்பது அவர்கள் குறிக்கோள் அல்ல. அதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதே அதன் நோக்கம்.*
FORWARDED THIS ARTICLE. TAMIL ENAIYA SEITHIGAL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக