85 சதவிகித இந்திய மக்கள் தங்களுடைய அரசை நம்புவதாகவும், ராணுவ விதிகளை மதிப்பதாகவும், 55 சதவிகித மக்கள் சர்வாதிகார அரசை விரும்புவதாகவும் பியூ நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா ஜனநாயக நாடாக விளங்குகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 55 சதவிகிதத்தினர் ஒருவழி அல்லது சர்வாதிகார ஆட்சியை விரும்புபவர்களாக உள்ளனர். மேலும், 27 சதவிகிதத்தினர் நல்ல வலுவான தலைவரை விரும்புகின்றனர்.
ஆசிய பசிபிக் நாடுகளைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பவியலை மக்கள் ஆதரிக்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ரஷ்யாவில் சரிபாதிக்கும் நிகரான (48 சதவிகிதம்) மக்கள் 'வலுவான தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய விதிகள் பெரும்பாலும் பரவலாவதில்லை' என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் 57 சதவிகிதத்தினர் அரசுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளனர். 38க்கும் அதிகமான நாடுகளில் மக்கள் அவர்களுடைய ஆட்சியின் மீது நன்மதிப்பையே கொண்டுள்ளனர். ஐரோப்பாவில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே ராணுவக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.'
பியூ ஆய்வு நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு நாடுகளில், பல்வேறு தலைப்புகளில் தன்னிச்சையாக தொடர் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. 'இந்திய அரசியல் மற்றும் மக்கள் விருப்பம்' என்ற தலைப்பில் சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் மக்கள் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்தியாவில் வாழும் மக்கள் எப்படிப்பட்ட ஆட்சி மற்றும் அரசியல் தலைவர்களை விரும்புகிறார்கள் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவிலோ 85 சதவிகிதம் பேர் அரசின் மீது நன்மதிப்பைக் கொண்டிருந்தாலும், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் சர்வாதிகார அரசை விரும்புவதாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக