☀அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏமாற்றமளிக்கிறது என்று ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கூறியதாவது:
☀அரசு ஊழியர் சங்க 7வது ஊதியக்குழு பொத்தாம் பொதுவாக பெரிதாக வழங்கியது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
☀6-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 3 தவணைகளிலும் அடுத்த ஊதியக்குழுவில் அந்த நிலுவைத்தொகை பொது வருங்கால வைப்புநிதி கணக்குகளிலும் இதுவரை வைக்கப்பட்டு வந்தது.
☀ஆனால் ஒட்டுமொத்தமாக 21 மாத கால நிலுவைத்தொகையை வழங்காதது வருத்தமளிக்கிறது.
☀அதே போல மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் 13 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணியாற்றுகிறார்கள்.
☀காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பணிபுரியக்கூடிய இவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகளை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
☀டெங்கு ஒழிப்பு பணிகளையும் பராமரிக்கிறார்கள்.
☀இந்த ஊராட்சி செயலாளர்கள் குறித்த ஊதியம் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது வலியுறுத்தினோம்.
☀அப்போது இந்த ஊழியர்களின் ஊதிய மாற்றம் நிச்சயமாக தனியாக அறிவிப்போம் என்றார்கள்.
☀ஆனால் அரசு அறிவித்த அறிவிப்பு இதற்கு மாறாக உள்ளது. வருத்தமளிக்கிறது.
☀மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போது மதிப்பூதியம், தொகுப்புதியம் பெறுபவர்களின் பணித்தன்மை, பணி நிலைமையை கணக்கில் எடுத்து ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். அந்த வாக்குறுதியை தற்போதைய அரசு காப்பாற்றவில்லை.
☀இந்த முரண்பாடுகள் குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் பரிசீலிப்போம்.
☀நீதிமன்ற உத்தரவுபடி தான் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.
☀வருகிற 23ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு எங்களது அறிவிப்பு இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக