- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*மாலை செய்திகள்@8/10/17💐*

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு சொந்த ஊரில் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசத்திற்காக கடுமையாக உழைப்பேன் என மோடி கூறிஉள்ளார்.

பாட்னா பல்கலை. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் - 14-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

லாலு குடும்பத்தினர் 3 பேரின் சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை

காஷ்மீர்: தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை

தேவேந்திரகுல வேளாளர் இனமக்கள்  தாழ்த்தப்பட்டோர் பட்டியலை விட்டு வெளியேறுகிறார்கள் என புதிய தமிழகம் மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

குறுகிய காலத்தில் எந்த போரையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது என விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறியுள்ளார்.

எல்லையில் சீன ராணுவ வீரர்களுக்கு இந்தி டியூசன் எடுத்த நிர்மலா சீதாராமன்

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலி: சுகாதார செயலர்

அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா -செல்லூர் ராஜூ

அரசு அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

கெயில் திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் - பாரதீய ஜனதா பதில்--கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி

மதுரை: பாலமேட்டை சேர்ந்த கூலிதொழிலாளி வைரஸ் காய்ச்சலுக்கு பலி

மக்களின் தேவையறிந்து திட்டங்கள் துவக்கம்: பழனிசாமி

2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டியது மேட்டூர் அணை

காரைக்கால் மீனவர்களுக்கு அக்.,20 வரை காவல்

டெங்கு காய்ச்சல் வார்டுகளில் இடநெருக்கடி: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அலோபதி முறையில் மருந்து கிடையாது: அகில இந்திய குழந்தைகள் மருத்துவர் சங்க தலைவர் தகவல்

அரசிடம் சாதனைகள் இல்லை: கனிமொழி

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: ராமதாஸ்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் துவக்கம்

லாரிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை தேவை: வாசன்

தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்  வலியுறுத்தல்

பிரதமர் மோடியை தான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

டெல்லி மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்த்த வேண்டாம் என்றால் டெல்லி மாநில அரசு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வீதம் ஐந்தாண்டுகளுக்கு தரவேண்டும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் ரோட்டில் வைத்து சமையல் செய்தபோது ஒரு பெண் மீது தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை: அமிதாப் பச்சன் அறிவிப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம்: நடிகை கவுதமி கருத்து

ஹார்வே, இர்மா புயல்களை தொடர்ந்து அமெரிக்காவை தாக்கிய நேட் புயல்: கனமழை எச்சரிக்கை

அமெரிக்காவில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை

சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.

வெற்றி இலக்காக எதை நிர்ணயம் செய்திருந்தாலும் ராஞ்சி மைதானத்தில் அந்த இலக்கை அடைந்திருப்போம் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here