விசில் சின்னத்தை கைப்பற்ற கமல் - ரஜினி இடையே கடுமையான போட்டி! ஜெய்க்கப்போவது யாரு? பதற்றத்தில் ரசிகர்கள்....... விசில் சின்னத்தைப் பற்றி வியந்த ரஜினி, தனது ஆரம்ப கால கண்டக்டர் வாழ்வில் விசில் அடித்தே தன் பயணம் தொடங்கியதையும், இப்போது விசில் மூலம் தனது வாழ்க்கையில் இன்னொரு பயணம் தொடங்க இருப்பதையும் மிக  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விசில் சின்னத்தை கைப்பற்ற கமல் - ரஜினி இடையே கடுமையான போட்டி! ஜெய்க்கப்போவது யாரு? பதற்றத்தில் ரசிகர்கள்....... விசில் சின்னத்தைப் பற்றி வியந்த ரஜினி, தனது ஆரம்ப கால கண்டக்டர் வாழ்வில் விசில் அடித்தே தன் பயணம் தொடங்கியதையும், இப்போது விசில் மூலம் தனது வாழ்க்கையில் இன்னொரு பயணம் தொடங்க இருப்பதையும் மிக 


கமல்-ரஜினி நீயா? நானா?

 கர்ப்பமாக இருக்கிறேன் என்று அறிவித்துவிட்டார் கமல். அதாவது விரைவில் அரசியல் கட்சி பிரசவிக்கப்படும் என்பதே இதன் பொருள். கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த தனது பிறந்த நாள் விழாவிலும்கூட மய்யம் விசில் என்ற ஒரு ஆப் உள்ளடக்கிய டிஜிட்டல் அரங்கத்தை அறிவித்திருக்கும் கமல், ‘இதுபற்றி முழுமையாகப் பிறகுதான் சொல்வோம். இல்லையென்றால் வேறு யாராவது இதை செய்துவிடுவார்கள்’ என்றும் முன்னெச்சரிக்கையோடு சொல்லியிருக்கிறார்.

ஆக கட்சியின் பெயர் என்ன என்பதை இன்னும் முடிவு செய்துகொண்டிருக்கும் கமல், அதேநேரம் தன் கட்சியின் சின்னம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கும் நிகழ்வுதான் அந்த மய்யம் விசில் டிஜிட்டல் அரங்கத்தின் அறிவிப்பு நிகழ்வு.

ஆம், கமல் தன் கட்சிக்காக இப்போது தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் சின்னம் விசில். விசில் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை செய்தல், புறப்படுவதற்கும், நிறுத்துவதற்குமான ஒரு வினைச் சொல்லே பெயர்ச் சொல்லாகியிருப்பதுதான் விசில்.

அந்த வகையில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து, வெள்ளத்துக்கு எதிராக விழிப்புணர்வு குரல் கொடுத்து, கொசஸ்தலை ஆற்று பிரச்னையில் எச்சரிக்கை குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கமல் தன்னையே ஒரு விசில் ஆக கருதிக்கொண்டிருக்கிறார். எனவே, தனது கட்சியின் சின்னமாக விசில் இருந்தால் அது மிகவும் எளிதானது என்றும், பொருத்தமானது என்றும் கருதுகிறார்.

எனவே விசில் சின்னத்தை தன் கட்சிக்காக எந்த வகையில் வடிவமைப்பது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார் கமல்.

விசில் சின்னம் அறிமுகம்

கமலுக்கு இந்த விசில் சின்னம் பற்றிய அறிமுகம் கிடைத்தது சுவாரஸ்யமான நிகழ்வு.

ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் தனது பல ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அனுபவத்தில் 2006ஆம் ஆண்டு லோக் சட்டா என்ற கட்சியைத் தொடங்கினார். ஜனநாயக சீர்திருத்தத்துக்காகத் தனது கட்சியைத் தொடங்கிய ஜே.பி. தகவல் அறியும் உரிமை சட்டத்தை தீவிரமாகப் பயன்படுத்தி தனது முந்தைய அதிகாரி என்ற அனுபவத்தில் இருந்து பல்வேறு வகையான நிர்வாகச் சீர்கேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் தனது கட்சிக்குத் தேர்ந்தெடுத்த சின்னம்தான் விசில்.

ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் ஜே.பி. இவரது கட்சி தமிழகத்திலும் இருந்தது. படித்த இளைஞர்களைக்கொண்ட லோக் சட்டா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஜெகதீஸ்வரன், விசில் என்ற பத்திரிகையையும் நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிரப்பு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக வழக்குத் தொடுத்தது லோக் சட்டா கட்சிதான். இப்படி பல வகையான விழிப்புணர்வுப் பணிகளைச் செய்தது அக்கட்சி.

இந்த லோக் சட்டா சமீப காலங்களாகத் தமிழகத்தில் பெரிதாகச் செயல்படவில்லை. கட்சியில் இருந்த செயற்பாட்டாளர்கள் பலர் அறப்போர் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் போன்ற விழிப்புணர்வு இயக்கங்களில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அறப்போர் இயக்கம் இப்போது தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் பற்றிய முப்பரிமாண விவரங்களை கமல்ஹாசனுக்குக் கொடுத்து வருகிறது. அந்த அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்டதுதான் விசில் பற்றி கமலுக்கு ஏற்பட்ட அறிமுகம்.

தனது இன்றைய சூழலில் விசில் சின்னம் என்பது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதியே மய்யம் விசில் என்ற டிஜிட்டல் பிளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார் கமல்.

நியாயத்தின் குரல் விசில்

“பல கட்சிகளின் அதாவது முரசுக்கு நிகராக, சங்குக்கு நிகராக, தாரைக்கு நிகராக நியாயத்துக்கு குரல் எழுப்பும் கருவிதான் நமது விசில். விசில் என்றால் தீயவை நடக்கும்போது குரல் கொடுக்கும் கருவியாகப் பயன்படும், விசில் அடித்தால் பட்டாளம் புறப்படும், ரயில் புறப்படும். பல விஷயங்கள் புறப்படும்.

இப்போது விசில் ப்ளோவிங் அதாவது நியாயத்துக்காக குரல் எழுப்புவது குறைந்திருக்கிறது அல்லது குறைக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்றி விசில் அடிப்பதை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்த விசிலை யார் வேண்டுமானாலும் அடிக்க வேண்டும். அதற்கான வாக்குறுதியை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும். (என்றவுடன் அரங்கத்தில் விசில் பறக்கிறது)

இதை எழுத்தாகவும் சொல்லாகவும் செயலாகவும் ஆக்க வேண்டும். நாளைக்கே எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் என்னைப் பார்த்தும் இந்த விசிலை அடிக்கலாம்” என்று அந்த நிகழ்வில் பேசினார் கமல்.

இதிலிருந்தே கமல் தனது கட்சிக்கு விசில் சின்னத்தை முடிவு செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ரஜினி வைத்த கண்!

இங்கேதான் இன்னொரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆம்... இந்த விசில் சின்னத்தின் மீது ரஜினியும் ஏற்கெனவே ஒரு கண் வைத்திருப்பதுதான் அது.

கடந்த மே மாதம் முதலாகவே ரஜினி தனது புதிய கட்சியைப் பற்றி தொடர்ந்து பல பிரமுகர்களுடன் ஆலோசித்தார். ஆனால், அந்த வேகம் ஏனோ திடீரென குறைந்து இப்போது மிகவும் நிதானம் காட்டுகிறார்.

ரஜினி அப்போது ஆலோசனை நடத்தியவர்களில் முக்கியமானவர் தமிழருவி மணியன். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொன்ராஜின் அப்துல் கலாம் கட்சி உட்பட கட்சிகளுடன் சேர்ந்து விசில் சின்னத்தில் தான் போட்டியிட்டார். அந்த அனுபவத்தை ரஜினியிடம் எடுத்துச் சொன்ன தமிழருவி மணியன், இந்த விசிலை நீங்கள் எடுத்து அடித்தால் அதன் ஒலி தமிழ்நாடு எங்கும் தங்குதடையின்றி பரவும் என்று ரஜினிக்கு யோசனை தெரிவித்தார்.

விசில் சின்னத்தைப் பற்றி வியந்த ரஜினி, தனது ஆரம்ப கால கண்டக்டர் வாழ்வில் விசில் அடித்தே தன் பயணம் தொடங்கியதையும், இப்போது விசில் மூலம் தனது வாழ்க்கையில் இன்னொரு பயணம் தொடங்க இருப்பதையும் மிக உணர்ச்சிவசப்பட்டு பரவசத்தோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

விசிலை ஊதுவது யார்?

ஆனால், இப்போது விசிலை கமல் முதலில் ஊதும் முயற்சியில் இருக்கிறார். மாநிலக் கட்சியாக பதிவு செய்யும் பட்சத்தில் விசில் சின்னத்தைக் கேட்டு கமல், ரஜினி இருவரில் யார் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.

யார் முதலில் விசிலை ஊதுவது என்பது ஒருபக்கம் இருக்க... தமிழகம் மீண்டும்’விசிலடிச்சான் குஞ்சுகள்’ வசம் போகப் போகிறதோ என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here