*_தமிழ் இணைய செய்திகள்_*   •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•                *_25.12.2017_*          *_திங்கட்கிழமை_* *_🐯🇮🇳🕊16 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தது திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_தமிழ் இணைய செய்திகள்_*   •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•                *_25.12.2017_*          *_திங்கட்கிழமை_* *_🐯🇮🇳🕊16 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தது திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்_*

*_தமிழ் இணைய செய்திகள்_*
  •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
               *_25.12.2017_*
         *_திங்கட்கிழமை_*

*_🐯🇮🇳🕊16 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தது திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்_*

திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சனி, ஞாயிறு, மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி படையெடுக்கும் மக்கள் இரவு முழுவதும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். இலவச தரிசன வரிசையில் வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி ஆழ்வார் ஏரியை சுற்றியுள்ள வரிசையை பக்தர்கள் அதிகாலையே சூழ்ந்தனர். 

16 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தது அவர்கள் தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இரவில் அறைகள் கிடைக்காத பக்தர்கள் கோவிலுக்கு முன்பு உள்ள திறந்த வெளியில் உறங்கினர். நேற்று எண்ணப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை மட்டும் 3 கோடியே 84 லட்சம் ரூபாய் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
*-WWW.SIVAKASITEACHERKARUPPASAMY.BLOGSPOT.COM-*
*_🐯🇮🇳🕊தமிழகத்தில் தொழில்வளர்ச்சி சரிந்ததால் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை_*

சென்னை: தமிழகத்தில் தொழில்வளர்ச்சி சரிந்ததால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை தாக்கல் செய்த அறிக்கையின் படி தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் தேசிய சராசரியை காட்டிலும் அதிகம். 

வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் அதிகம்
தொழில் வளமிக்க மாநிலங்களில் தமிழகத்தில் தான் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அதிகம். வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்துவிட்டு 81 லட்சத்து 30 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். மருத்துவர்கள் 4,307 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சத்து 3 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். 

படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது அறிது 
தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது அறிதாகி வருகிறது. படித்த இளைஞர்கள் அதிகம் இருந்தும் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க காரணம், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை தரும் விஷயம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
•┈┈•❀🐯🌴🇮🇳🌴🕊❀•┈┈•

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here