- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad


*-தமிழ் இணைய செய்திகள் -*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

       07/12/2017
         வியாழன்

_🐯🇮🇳🕊‛சரக்கு' அடிப்போர் வயது வரம்பை உயர்த்தியது கேரள அரசு_*

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் குடி மகன்களுக்கான வயது வரம்பை உயர்த்தியது மாநில அரசு. 
கேரளாவில் இடது சாரி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயிவிஜயன் உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குடி மகன்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது வரம்பான 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து கட்சி உறுப்பினர்கள் கூறுகையில் குடிமகன்களுக்கான வயது வரம்பை உயர்ததுவது குறித்து தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 6 சதவீதம் பேர் மட்டுமே. 54சதவீதம் பேர் உபரியானவர்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த காங்., ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் பெருமளவில் பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் மாநிலத்தில் 30 பார்கள், 815 பீர் மற்றும் ஒயின் பார்லர்கள், 306 அரசு நடத்தும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

🐯🇮🇳🕊பாக், பயங்கரவாத அமைப்புகளின் பெயர்: ரிக் மாநாட்டில் வலியுறுத்த இந்தியா திட்டம்_*

புதுடில்லி: ரி்க் மாநாட்டில் பாக்.கில் இருந்து செயல்பட்டு வரும் பயஙகரவாத அமைப்புகளின் பெயர்களை பட்டியலிட்டு புகார் கூற இந்தியா திட்டமிட்டுள்ளது.

ரிக் எனப்படும் ரஷ்யா இந்தியா சீன வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் 11-ம் தேதி நடக்கிறது.இதில் மத்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பது சீனாவுடனான எல்லை பிரச்னை, தென் சீன கடல் விவகாரம் மற்றும் அணுசக்தி சப்ளை குழுவில் இந்தியா இடம் பெற ஆதரவு கோருவது .உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் குறித்த விவாதிக்கப்பட உள்ளது.
இதில் முக்கிய பாக்.கில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கரே தொய்பா, ஜெயிஷ் இ- முகமம்து உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை வெளியிடவும் இவற்றை ஒடுக்குவது குறித்து அழுத்தம் தரவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.கடந்த செப்டம்பரில் பிரிக்ஸ் மாநாட்டின் போது ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்பு குறித்து புகார் தெரிவித்த இந்தியா அதில் தூதரக அளவில் வெற்றி பெற்றது குறி்ப்பிட தக்கது.

_🐯🇮🇳🕊குஜராத் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஒய்கிறது- சூரத்தில் மோடி_*

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் இன்றுடன் பிரசாரம் ஒய்கிறது. பிரதமர் மோடி சூரத்தில் தனது இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.

குஜராத் சட்டசபையில் 182 தொகுதிகளுக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 18-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலில் காங்., பா,ஜ.விறகும் நேரடியாக போட்டி என்பதால் கடந்த சில வாரங்களாக காங்.துணை தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு பெறும் நிலையில் உச்சகட்டமாக பிரதமர் மோடி சூரத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

🐯🇮🇳🕊ஜம்மு-காஷ்மீரின் தாங்க் பகுதியில் நிலநடுக்கம்_*

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் 111 கி.மீ வடகிழக்கில் உள்ள தாங்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. 

*_🐯🇮🇳🕊புயலால் உருக்குலைந்த குமரியில் தமிழக ஆளுநர் இன்று ஆய்வு -பாதிப்புகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்_*

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதியம்மன் கோவிலில் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையஸ்வாமி கோவிலுக்கு சென்று ஸ்வாலி தரிசனம் செய்துள்ளார். புயல் பாதித்த இடங்களையும் அவர் பார்வையிடுகிறார். நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று இரவு  கன்னியாகுமரி வந்தடைந்தார். 

ஆளுநர் வருகையால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி அரசாங்கம் விருந்தினர் மாளிகையில் சிற்றுண்டி அருந்திவிட்ட பின், சுசீந்திரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். இதனையடுத்து 

இந்நிலையில் ஆளுநரின் பயண திட்டங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று மாலை 3 மணி அளவில் கன்னியாகுமரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்பத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆளுநர், நெல்லையில் ஆலோசனை கூட்டங்களுடன் பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார். இந்நிலையில் கன்னியாகுமரி அவர் செல்லும் இடங்களிலும் கூட பொதுமக்களிடம் மனுக்கள் பெற கூடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

       *_வியாழக்கிழமை_*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🐯🇮🇳🕊கோவில்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக பாலம் உடைந்தது_*

தூத்துக்குடி: கோவில்பட்டி அடுத்த குமராபுரம் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக பாலம் உடைந்தது. தற்காலிக பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

*_🐯🇮🇳🕊அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று விசாரணை_*

சென்னை: அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று காலை 11 மணிக்கும் விசாரணை நடைபெறவுள்ளது. தி.நகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி சசிகுமார் இன்று விளக்கமளிக்கவுள்ளார். 

•┈┈•❀🐯🌴🇮🇳🌴🕊❀•┈┈•
: *◾🔥இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
____________________________________: *◾◼பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அயோத்தி வழக்கு விசாரணை: சன்னி வக்பு வாரியத்தின் கருத்துக்கு பிரதமர் பாராட்டு*
___________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here