*-தமிழ் இணைய செய்திகள்-*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🐯🇮🇳🕊பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் : நீதிபதிகள் நம்பிக்கை_*
மதுரை : போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா முன் வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் முறையீடு செய்தார். போக்குவரத்து ஊழியர் பிரச்சனையை அரசு கவனித்து வருகிறது என்று கே.கே.ரமேஷ் முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
*_🐯🇮🇳🕊நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய மனு : விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்_*
டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு மற்றும் பட்டாசு விற்பனையாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு கோரி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 11-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
*_🐯🇮🇳🕊அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் அவசர ஆலோசனை_*
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அமைச்சர் கூறியதை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் அவசர ஆலோசனை செய்து வருகிறது.
*-www.sivakasiteacherkaruppasamy.blogspot.com-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக