ரயில்வேயில் இதுவரை இல்லாத அளவு 90,000 பேருக்கு வேலை: அறிவிப்பு வெளியீடு!!! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரயில்வேயில் இதுவரை இல்லாத அளவு 90,000 பேருக்கு வேலை: அறிவிப்பு வெளியீடு!!!

ரயில்வே துறையில் இதுவரை இல்லாத அளவு 90,000 பேரை புதிதாக
பணியமர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளளது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரயில்வேயில் ஒவ்வாரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். குறிப்பாக ரயில் பாதை பராமரிப்பாளர்கள், ரயில் நிலைய பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் ஆண்டுதோறும் ஏராளமான பணியிடங்கள் காலியாகின்றன. ரயில்வே பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ரயில்வே துறை தற்போது, இதுபோன்ற குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை அதிகம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரயில்வே துறை, இதுவரை இல்லாத அளவு 90,000 ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது. இதன்படி, ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கேங்மேன்கள் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பட உள்ளன இதில், டி பிரிவு ஊழியரகள் 63 ஆயிரம் பேரும், ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட 26,500 பிற ஊழியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அடிப்படை கல்வி தகுதி 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி எனப்படும் தொழில்நுட்ப கல்வி பெற்றிருக்க வேண்டும். குரூப் சி, 2ம் நிலை பணியிடங்களுக்கு வயது வரம்பு 18 -28 ஆகும். இதற்கு மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் டி பிற நிலை பணியிடங்களுக்கு 18 -31 வயது வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் 12ம் தேத வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு போன்றவை நடைபெறும் போது, எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்று திறனாளி பிரிவினருக்கு, படுக்கை வசதியுடன் ரயில்களில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான விவரம் ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here