ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஓரணியில் திரள வேண்டும்* *கற்பிப்பவர் கடவுளுக்கு நிகரானவர் அல்ல... கடவுளுக்கும் மேலானவர் என்பதே உண்மை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஓரணியில் திரள வேண்டும்* *கற்பிப்பவர் கடவுளுக்கு நிகரானவர் அல்ல... கடவுளுக்கும் மேலானவர் என்பதே உண்மை*

ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஓரணியில் திரள வேண்டும்*

*கற்பிப்பவர் கடவுளுக்கு நிகரானவர் அல்ல... கடவுளுக்கும் மேலானவர் என்பதே உண்மை*

மாதா. பிதா. குரு. அதன்பிறகுதான் தெய்வம் என்கிறோம்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு பக்தி இருந்தது.

பக்தியுடன் பயின்ற மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றியடைந்தனர்.

ஆசிரியர் பணி என்பதும் பாதுகாப்பான பணிகளில் ஒன்றாக... பெண்கள் மற்ற பணிகளை விட ஆசிரியர் பணியை விரும்பி தேர்வு செய்ய ஆரம்பித்தனர்...
எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அரசின் தவறான கல்வி கொள்கை நம்மை நெருங்கும் வரை.

*இன்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களுடைய வகுப்பாசிரியர்களைப் பார்த்து விட்டால் மரியாதை செலுத்த ஆரம்பித்து பயபக்தியுடன் அவர்களிடம் பேசுவதை நம்மால் காண முடிகிறது*

ஆனால், இன்றைய டீன் ஏஜ் என்னும் 13--19 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகள்... குறிப்பாக அரசு பள்ளிகளில் இலவசக்கல்வி பயிலும் மாணவர்களின் போக்கு மிக மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டுள்ளது
ஒரு பக்கம் அரசு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்க.. அதனால் வாரத்தின் மொத்த நாட்களையும் அவர்கள் மாணவர்களுக்கா செலவிட்டு வருகின்றனர்...
ஆசிரியர்களும் மனிதர்கள்தான்..

அவர்கள் உடல் இரும்பினாலோ கல்லினாலோ ஆனதல்ல... அதனால் வேலை பளுவின் காரணமாக அவர்களில் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், சிலர் உடல் நலம் குன்றுகின்றனர் என்றாலும் மாணவர்களை ஊக்குவித்து, கல்வியில் சிறப்படைய வைத்து தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று சிறப்பு வகுப்புகளும் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போக்கு ஆசிரியர்களின் நலனுக்கு சமீப காலமாக எதிராகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் விஞ்ஞான வளர்ச்சி... ஊருக்கு ஊர் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள்..
ஒரு சில மாணவர்கள்.. அலை பேசியில் ஆபாச படங்கள் பார்ப்பதும், ஒரு சில மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி தவறான பாதையில் செல்வதும் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது...

இது மற்ற மாணவர்களின் நலனையும் கெடுத்து விடும் என்றெண்ணி ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க ஆரம்பித்தால், அடுத்த நிமிடம் ஆசிரியர்களை தாக்குவது... கொலை செய்ய முயற்சிப்பது என்று சட்ட விரோதச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்... சமீபத்தில் மாணவர்களால் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

இவை எல்லாம் அரசு பள்ளிகளில் மட்டும்தான்...
தனியார் பள்ளிகளில் ஒரு மாணவர் சிறிய தவறை செய்தாலும் அடுத்த நிமிடம் அவருக்கு டி.சி.கிழித்து கொடுக்கப் பட்டு விடும்..

ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஒரு மாணவர் தவறு செய்கிறார் என்று ஒரு ஆசிரியர் கண்டிப்புடன் நடக்க ஆரம்பித்தால் அதிகாரிகளின் கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆட்பட வேண்டி இருக்கும்..

இந்த நிலையில் சமீப காலத்தில் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதே உண்மையாக உள்ளது.

மாணவர்கள்..
குறிப்பாக அரசு பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்று வரும் மாணவர்கள்தான் இத்தகையவர்களாக இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும்போது... இலவசமாக கல்வி வழங்குவதால்தான் இவர்களுக்கு கல்வியின் அறுமை தெரியாமல் கல்வி கற்கும் எண்ணம் இல்லாமல் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பணம் செலுத்தி இவர்கள் படிப்பார்களேயானால் படிப்பின் மீது இவர்களுக்கு அக்கறை வந்திருக்கும்... இவர்களின் பெற்றோர்களுக்கும் இவர்கள் நலனில் அக்கறை உண்டாகி இருக்கும்.

ஆனால்,
இலவச கல்வி... அரசு ஆசிரியர்தானே என்ற எண்ணம் இன்று ஆசிரியர் இனத்திற்கே ஆபத்தாகியுள்ளது.
நடந்து வருவதை எல்லாம் பார்த்த பிறகும் ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்களேயானால் நாளை எந்த ஆசிரியருக்கும் எதுவும் நடக்கலாம்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவராக தாக்கப்பட்டு வரும் நிலையில் முதலில் தங்கள் நலனில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அக்கறை உண்டாக வேண்டும்..

ஆசிரியர் நல்ல மன நிலையில் இருந்தால் மட்டுமே வகுப்பறைகளில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.. மாணவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்கிட முடியும்...

இவற்றையெல்லாம் அனைத்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் பிரதான பிரச்னையாக எடுத்துக்கொண்டு தங்கள் உயிர்ப்பாதுகாப்பிற்காக ஓரணியில் திரள வேண்டும்... பள்ளிகளில் ஆசிரியர்களால் சுதந்திரமாக செயல்படும் நிலையை அரசு உருவாக்கும் வரை அனைத்து ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்.

தவறு செய்யும் மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு வேண்டும்.

தனியார்ப் பள்ளிகள் போல் மாணவர்களைக் கண்டிப்பாக பயிற்று வைக்கும் நிலையை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் ஓரணியில் திரண்டு போராட்டக் களம் காண வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here