*🔶🔶🔶2019-ல் யாருடன் கூட்டணி: ஆலோசிக்க பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அழைப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔶🔶🔶2019-ல் யாருடன் கூட்டணி: ஆலோசிக்க பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அழைப்பு*





*நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயார்படுத்தி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் மார்ச் 23-ம் தேதி பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி ஆலோசிக்க உள்ளார்.

நடந்த முடிந்த வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து,திரிபுரா ஆகிய சட்டசபை தேர்தல்களில் பா.ஜ. வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பலனை 2019-ம் ஆண்டு வரப்போகும் பார்லி. லோக்சபாவிலும் எதிரொலிக்க செய்ய வியூகம் வகுத்து வருகிறது.
இது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டத்தை வரும் 23-ம் தேதி கூட்ட உள்ளார். இதற்காக அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், இக்கூட்டத்தின் போது மே மாதத்துடன் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்று நான்காண்டு நிறைவு பெற்றதை பாராட்டியும் 2019-ம் லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் பா.ஜ. எம்.பி.க்கள் தங்களது கருத்தை தெரிவிக்கவும் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*

*|➖➖➖➖➖➖➖➖➖➖|*
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here