*சூரிய சக்தி மூலம் 100% மின்சார தேவையை பூர்த்தி செய்யும் யூனியன் பிரதேசம் ’டையூ’
* 42 சதுர கி.மீ நிலப்பரப்பில் 50 ஏக்கரில் சூரிய மின் தகடுகள் பொருத்தம்
நாட்டில் 100% சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமை உருவாக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமாக திகழும் டையூ, மூன்றே ஆண்டுகளில் சூரிய ஆற்றல் உருவாக்கத்தில் அதிவேக வளர்ச்சி பெற்றுள்ளது.
டையூ ஒட்டுமொத்தமாக 42 சதுர கி.மீ பெற்றுள்ளது. நிலப்பற்றாக்குறை இருந்த போதிலும், 50 ஏக்கரில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதைக் கொண்டு நாள்தோறும் 13 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உயரத்தில் இருக்கும் சூரிய தகடுகள் மூலம் 3 மெகாவாட் மின்சாரமும், பிற சூரிய தகடுகள் மூலம் 10 மெகாவாட் மின்சாரமும் உருவாக்கப்படுகிறது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக