சிவகாசி ஆசிரியர் கூட்டுறவு சங்கமும் கடந்த ஐந்தாண்டு சாதனைகளும்
1)கடந்த 2013 ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டார்கள் என்ற காரணத்திற்காக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்ந்த கடன்தொகை கணக்குமுடிக்கும் நண்பர்களுக்கு புதிதாக சட்டம் இயற்றி 5 ஆண்டுகள் கூட்டுறவு சங்த்தில் சேர முடியாதபடி தடைவிதித்தது சாதனை(ஆதாரம்: தீர்மான புத்தகம்-2014)
2) 5 ஆண்டுகள் முடிந்தபின்னரும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுக்காதது
3)விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் உறுப்பினர்கள் பணம் ரூபாய்.40 லட்சத்தை மீட்பதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தது ஒரு சாதனைதான்
4)இன்சூரன்ஸ் என்ற பெயரில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அதிக தொகை வசூல் செய்யும் நிறுவனத்திடம் பாலிசி பணம் கட்டியதும் ஒரு சாதனைதானே.
(எ.கா) ஒரு உறுப்பினருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 150 கூடுதலாக கட்டினால் ஒரு ஆண்டிற்கு 300 வீதம் சராசரியாக 200 உறுப்பினர்கள் என்றால் 60000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
கூடுதலாக கட்டிய பணம் எங்கே சென்றது.
5)கூட்டம் நடத்துவதற்கு டீ,பிஸ்கட் வாங்கிக்கொடுத்ததற்கே ரூபாய்.10000. செலவு செய்தது சாதனைதான்.
6) 5 ஆண்டுகளில் ஒரு முறைகூட நிர்வாகக்குழு கூட்டுறவு சங்க அலுவலர்களை(JR மற்றும் DR) சந்தித்து கோரிக்கை வைக்காததும் சாதனைதான்.
7)இதையெல்லாம் சலைக்காமல் கேள்விகேட்டது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாதனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக