*அரசு ஊழியர்,ஆசிரியர்கள் சங்கங்களை மறக்கலாமா? ஏளனமாக எண்ணுவது சரியா? அவர்கள்(சங்கம்) இல்லையேல் இன்னும் தொழிலாளர் வர்க்கம் அடிமையே*..
*சிந்திப்பீர்!!* *செயல்படுவீர்!!தோழர்களே*..
*மறித்துப்போனோமா மரத்துப்போனோமா*
*தீதும்நன்றும்பிறர்தரவாராது*
*எங்கே போனது உணர்வுகள்*???
மாதச் சம்பளம்
ரூ.80க்கும் 120க்கும் பஞ்சாயத்து போர்டு தலைவரிடம் இரவு வரை காத்திருந்து ஆசிரியர்கள் ஊதியம் பெற்றவந்தததை எதிர்த்து போராடியது தந்ததுயார் அரசா
பலரும் இன்னுயிர்களை கொடுத்து கௌரவமான
ஊதியம் பெற்று வழங்கிய *போராளி* இனத்தின் உணர்வுகள் எங்கே தொலைந்துபோனது??
1980 _81 போராட்டங்களின் போது ஆசிரியர்களை அரசு ஊழியராக்கி சமுகத்தி்ல் சிறந்த அந்தஸ்த்தை பெற்று தந்த
*ஜாக்டீ*
போராளிகளுக்கு நீ்ங்கள் செய்யும் நன்றிக்கடன் என்ன??
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போராடிப்பெற்ற களத்திலும், மத்தியச் சிறைச்சாலைகளிலும் *இறந்து* போனவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா??
தியாகிகளுக்கு
அன்று போராடியவர்கள் சிறையிலிருந்து வெளி வருவதற்குள்ளே புதிய சம்பளப்பட்டியலை *கருவூலத்திற்கு* அனுப்பிய சில வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று பெருகிவிட்டதோ??
ஓய்வூதிய பணப்பயன்ளை பாதுகாக்கவும், ஈட்டியவிடுப்பை மீட்டெடுக்கவும் *ஜாக்டோ ஜியோ*
மூலம் 2003ல் போராடி ,
மாதக்கணக்கில் ஊதியம் இழந்து, வழக்குகளை சந்தித்து,
சிறைச் சென்று , இன்னுயிர் நீத்த வீரமறவர்களின் தியாகத்தால் தான் இன்று 15நாள் ஈட்டிய விடுப்பை ரொக்கமாக ஆண்டுதோரும் பெற்று வருகிறோம் என்ற உணர்வுகள் உங்களுக்கு எப்போது பிறக்கும் *கற்பித்தல் கடவுள்களே*???
எல்லாவற்றையும் அரசாங்கமே கொடுக்கிறது, சங்கங்கள் காரணமல்ல என்று கூறுபவர்ககேளே
செப்டம்பர் 2017 ஏழு நாட்கள் வேலைநிறுத்திற்கு முன்பாகவா இந்த அரசாங்கம் புதிய ஊதியக்குழுவை அறிவித்தது??
பத்து வருடங்களாக போராடியும் இந்நாள் வரையில் ஊதிய முரண்பாடுகளை ஏன் களைந்திடவில்லை இந்த அரசுகள்.??
14வருடங்களாக சி.பி.எஸ் திட்டம் குறித்து தெளிவாக ஏன் இந்த அரசுகள் முடிவாற்றவில்லை?
சி.பி.எஸ் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18000 கோடி ரூபாய் பணத்தை எங்கே , எந்த கணக்கில் வைத்துள்ளது என்று அறிக்கையினை இந்த அரசுகள் ஏன் வெளியிடவில்லை??
CPSக்கு அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவினை ஏன் இந்த அரசு நீட்டித்துகொண்டே உள்ளது??
இன்று பகுதிநேர ஊழியருக்கும் , ஆசிரியருக்கும்,
சத்துணவு ஊழியர்களுக்கும் *இந்த அரசு வழங்கும்* சம்பளத்தொகை சரியென்றால், அப்போது நமது ஊதியம் மிக அதிகமென்று அர்த்தமாக்கிக் கொள்ளலாமா??
நேரடியான பாதிப்புகளையே உணராமல் இருப்பவர்கள் ,
தனியார் மயம் , ஆட்குறைப்பு,
பழிவாங்கல் நிகழ்வு, போன்று எதிர்வரும் மறைமுகமான பாதிப்புகளை நாம் உணர்வது எப்பாே?
போராடுவது எப்போ??
இனி எப்போது ஜாக்டோ-ஜியோ அழைப்பு விடுத்திலும் எழுச்சியோடு கலந்துகொள்ளுங்கள்
போராட்டகளம் காணாமல் ஆதாயம் பெற்றக்கொள்ளமுடியாது.
தற்போது ஆளும் அரசாங்கமாக இருந்தாலும்,
ஆளப்போகிறவர்களாகஇருந்தாலும்
நாம் போராடி போராடித்தான் பெற்றாக வேண்டும் நம் உரிமைகளை.....
விழித்திடு தோழா..
விழித்திடு தோழி...
விழிப்பே வெற்றி தரும்..
!!நன்றி!!
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNPTF
சிவகாசி வட்டாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக