செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
குழந்தைகளைக் கடைக்கு அழைத்துச் சென்று உனக்குத் தேவையானதை வாங்கிக்கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சாக்லேட்டாகத்தான் இருக்கும். ஏனெனில் சாக்லேட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சாக்லேட்டை விரும்பாத குழந்தைகளே கிடையாது.
இதனால்தான் உணவு பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான சாக்லேட்டுகளைத் தயாரிக்கின்றன. சாக்லேட்டுகள் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார யுக்திக்காகத் தவறாகப் பயன்படுத்தியும் பணம் சம்பாதிக்கிறார்கள்.
இந்தப் போதை சாக்லேட் விவகாரம் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தை உலுக்கியது. சென்னை, சேலம், விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கிலோ கணக்கில் போதை சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்தார்கள். தற்போது மீண்டும் இந்தப் போதை சாக்லேட்டுகள், பள்ளிக்கூட மாணவர்களைக் குறிவைத்து விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.
தேனி - மதுரை சாலையில் உள்ள மேரி மாதா என்ற மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் சிறுமி ஒருவர் நேற்று (ஏப்ரல் 18) வகுப்பறையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டபோது, ‘மம்மி டாடி’ என்று பாக்கெட்டில் எழுதப்பட்டுள்ள பாக்கை மகளுக்கு வாங்கிக் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தேனியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, 36 கிலோ மம்மி டாடி பாக்கு, வண்ண மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும், கேரளாவில் இருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது என விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பாக்குகள் மற்றும் சாக்லேட்களில் போதைப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிவதற்காகப் பரிசோதனைக் கூட ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக